|
|
1. அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தெலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் அண்ணன் எசாயூவுக்கு அஞ்சி ஓடிய போது உனக்குத் தோன்றின கடவுளுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டு என்றார்.
|
1. And God H430 said H559 unto H413 Jacob H3290 , Arise H6965 , go up H5927 to Bethel H1008 , and dwell H3427 there H8033 : and make H6213 there H8033 an altar H4196 unto God H410 , that appeared H7200 unto H413 thee when thou fleddest H1272 from the face H4480 H6440 of Esau H6215 thy brother H251 .
|
2. அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் அனைவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அன்னிய தேவர்களை அகற்றி விட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடைகளை மாற்றக்கடவீர்கள்.
|
2. Then Jacob H3290 said H559 unto H413 his household H1004 , and to H413 all H3605 that H834 were with H5973 him , Put away H5493 H853 the strange H5236 gods H430 that H834 are among H8432 you , and be clean H2891 , and change H2498 your garments H8071 :
|
3. எழுந்து வாருங்கள்; பெத்தெலுக்குப்போய், என் துயர நாளிலே என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு வழித்துணையாய் இருந்த கடவுளுக்கு அவ்விடத்திலே ஒரு பலிப் பீடத்தை அமைப்போம் என்றான்.
|
3. And let us arise H6965 , and go up H5927 to Bethel H1008 ; and I will make H6213 there H8033 an altar H4196 unto God H410 , who answered H6030 me in the day H3117 of my distress H6869 , and was H1961 with H5973 me in the way H1870 which H834 I went H1980 .
|
4. அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா அன்னிய விக்கிரகங்களையும் அவற்றின் காதணிகளையும் அவன் கையில் கொடுத்தனர். அவன் அவற்றைச் சிக்கேம் நகருக்கு வெளியே இருந்த ஒரு தரபிரண்ட் மரத்தின் கீழே புதைத்தான்.
|
4. And they gave H5414 unto H413 Jacob H3290 H853 all H3605 the strange H5236 gods H430 which H834 were in their hand H3027 , and all their earrings H5141 which H834 were in their ears H241 ; and Jacob H3290 hid H2934 them under H8478 the oak H424 which H834 was by H5973 Shechem H7927 .
|
5. பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த எல்லா நகர மக்களுக்கும் தெய்வீகமான ஒரு பயங்கரம் உண்டானதனாலே, அவர்களைப் பின் தொடர எவரும் துணியவில்லை.
|
5. And they journeyed H5265 : and the terror H2847 of God H430 was H1961 upon H5921 the cities H5892 that H834 were round about H5439 them , and they did not H3808 pursue H7291 after H310 the sons H1121 of Jacob H3290 .
|
6. இவ்வாறு யாக்கோபும், அவனோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தெல் எனப்படும் லூசானுக்கு வந்து சேர்ந்தனர்.
|
6. So Jacob H3290 came H935 to Luz H3870 , which H834 is in the land H776 of Canaan H3667 , that H1931 is , Bethel H1008 , he H1931 and all H3605 the people H5971 that H834 were with H5973 him.
|
7. யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிப் பீடத்தைக் கட்டி, தன் சகோதரனிடமிருந்து தப்பியோடின நாளில் அங்கே கடவுள் தனக்குக் காட்சி கொடுத்த காரணத்தால், அந்த இடத்திற்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.
|
7. And he built H1129 there H8033 an altar H4196 , and called H7121 the place H4725 El H416 -bethel: because H3588 there H8033 God H430 appeared H1540 unto H413 him , when he fled H1272 from the face H4480 H6440 of his brother H251 .
|
8. அப்பொழுது இரெபேக்காளின் பணிப்பெண்ணாகிய தெபொறாள் இறந்தாள்; பெத்தெலுக்கு அண்மையிலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் பண்ணப் பட்டாள். எனவே, அவ்விடத்திற்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.
|
8. But Deborah H1683 Rebekah H7259 's nurse H3243 died H4191 , and she was buried H6912 beneath H4480 H8478 Bethel H1008 under H8478 an oak H437 : and the name H8034 of it was called H7121 Allon H439 -bachuth.
|
9. யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமியவிலிருந்து திரும்பி வந்த பின் கடவுள் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்து:
|
9. And God H430 appeared H7200 unto H413 Jacob H3290 again H5750 , when he came H935 out of Padan H4480 H6307 -aram , and blessed H1288 him.
|
10. இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்ராயேல் எனப்படுவாய் என்று, அவனுக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டருளினார்.
|
10. And God H430 said H559 unto him , Thy name H8034 is Jacob H3290 : thy name H8034 shall not H3808 be called H7121 any more H5750 Jacob H3290 , but H3588 H518 Israel H3478 shall be H1961 thy name H8034 : and he called H7121 H853 his name H8034 Israel H3478 .
|
11. மேலும், அவர் அவனை நோக்கி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ பலுகிப் பெருகக் கடவாய். இனங்களும் மக்களும் கூட்டங்களும் உன்னிடமிருந்து உற்பத்தியாகும். அரசர்களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.
|
11. And God H430 said H559 unto him, I H589 am God H410 Almighty H7706 : be fruitful H6509 and multiply H7235 ; a nation H1471 and a company H6951 of nations H1471 shall be H1961 of H4480 thee , and kings H4428 shall come out H3318 of thy loins H4480 H2504 ;
|
12. ஆபிரகாம் ஈசாக்குக்கு நாம் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்போம் என்று சொல்லி,
|
12. And the land H776 which H834 I gave H5414 Abraham H85 and Isaac H3327 , to thee I will give H5414 it , and to thy seed H2233 after H310 thee will I give H5414 H853 the land H776 .
|
13. அவனை விட்டு மறைந்துபோனார். அப்போது யாக்கோபு
|
13. And God H430 went up H5927 from H4480 H5921 him in the place H4725 where H834 he talked H1696 with H854 him.
|
14. தனக்கு ஆண்டவர் திருவாக்கருளிய அந்த இடத்தில் ஒரு கற்றூணை நினைவுச் சின்னமாக நாட்டி அதன் மேல் பானப்பலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.
|
14. And Jacob H3290 set up H5324 a pillar H4676 in the place H4725 where H834 he talked H1696 with H854 him, even a pillar H4678 of stone H68 : and he poured H5258 a drink offering H5262 thereon H5921 , and he poured H3332 oil H8081 thereon H5921 .
|
15. அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
|
15. And Jacob H3290 called H7121 H853 the name H8034 of the place H4725 where H834 God H430 spoke H1696 with H854 him, Bethel H1008 .
|
16. பின் அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எபிறாத்தாவுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பேறுகால வேதனை உண்டானது.
|
16. And they journeyed H5265 from Bethel H4480 H1008 ; and there was H1961 but H5750 a little way H3530 H776 to come H935 to Ephrath H672 : and Rachel H7354 travailed H3205 , and she had hard H7185 labor H3205 .
|
17. அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.
|
17. And it came to pass H1961 , when she was in hard H7185 labor H3205 , that the midwife H3205 said H559 unto her, Fear H3372 not H408 ; thou shalt have this H2088 son H1121 also H1571 .
|
18. ஆனால், வேதனை மிகுதியினாலே உயிர் பிரியப் போகும் வேளையில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி- அதாவது, என் வேதனைப் புதல்வன்- என்று பெயரிட்டாள். தந்தையோ, அவனைப் பெஞ்சமின்- அதாவது, வலக்கை மகன்- என்று அழைத்தான்.
|
18. And it came to pass H1961 , as her soul H5315 was in departing H3318 , ( for H3588 she died H4191 ) that she called H7121 his name H8034 Ben H1126 -oni : but his father H1 called H7121 him Benjamin H1144 .
|
19. இராக்கேல் அப்போது உயிர் நீத்தாள்; எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டாள்.
|
19. And Rachel H7354 died H4191 , and was buried H6912 in the way H1870 to Ephrath H672 , which H1931 is Bethlehem H1035 .
|
20. யாக்கோபு அவளுடைய கல்லறையின் மேல் ஒரு தூணை நாட்டி வைத்தான். இந்நாள் வரையிலும் அது இராக்கேலுடைய கல்லறையின் நினைவுத் தூண் (என்று அழைக்கப்படுகிறது).
|
20. And Jacob H3290 set H5324 a pillar H4676 upon H5921 her grave H6900 : that H1931 is the pillar H4678 of Rachel H7354 's grave H6900 unto H5704 this day H3117 .
|
21. அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரத்திற்கு அப்பால் தன் கூடாரத்தை அடித்தான்.
|
21. And Israel H3478 journeyed H5265 , and spread H5186 his tent H168 beyond H4480 H1973 the tower H4026 of Edar H4029 .
|
22. அவன் அந் நாட்டில் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் ரூபன் தன் தந்தையின் மறு மனைவியாகிய பாலாளோடு படுத்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற் போகவில்லை. அவனுடைய புதல்வர் பன்னிரண்டு பேர்.
|
22. And it came to pass H1961 , when Israel H3478 dwelt H7931 in that H1931 land H776 , that Reuben H7205 went H1980 and lay with H7901 H853 Bilhah H1090 his father H1 's concubine H6370 : and Israel H3478 heard H8085 it . Now the sons H1121 of Jacob H3290 were H1961 twelve H8147 H6240 :
|
23. (அதாவது,) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சிமையோன், லேவி, யூதா, இசக்கார், ஜபுலோன் என்பவர்கள்.
|
23. The sons H1121 of Leah H3812 ; Reuben H7205 , Jacob H3290 's firstborn H1060 , and Simeon H8095 , and Levi H3878 , and Judah H3063 , and Issachar H3485 , and Zebulun H2074 :
|
24. இராக்கேலின் மக்கள்: சூசையும் பெஞ்சமினும்.
|
24. The sons H1121 of Rachel H7354 ; Joseph H3130 , and Benjamin H1144 :
|
25. இராக்கேலின் வேலைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும் நெப்தலியும்.
|
25. And the sons H1121 of Bilhah H1090 , Rachel H7354 's handmaid H8198 ; Dan H1835 , and Naphtali H5321 :
|
26. லீயாளுடைய வேலைக்காரி ஜெல்பாளின் புதல்வர்கள்: காத்தும் ஆசேரும். இவர்கள் சீரிய மெசோப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.
|
26. And the sons H1121 of Zilpah H2153 , Leah H3812 's handmaid H8198 ; Gad H1410 , and Asher H836 : these H428 are the sons H1121 of Jacob H3290 , which H834 were born H3205 to him in Padan H6307 -aram.
|
27. யாக்கோபு ஆர்பேயின் நகராகிய மம்பிறேய்க்கு, தந்தையாகிய ஈசாக்கிடம் வந்தான். அது அபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிறோன் என்னும் ஊர்.
|
27. And Jacob H3290 came H935 unto H413 Isaac H3327 his father H1 unto Mamre H4471 , unto the city of Arbah H7153 , which H1931 is Hebron H2275 , where H834 H8033 Abraham H85 and Isaac H3327 sojourned H1481 .
|
28. ஈசாக்கின் வாழ்நாள் மொத்தம் நூற்றெண்பது ஆண்டுகள்.
|
28. And the days H3117 of Isaac H3327 were H1961 a hundred H3967 and fourscore H8084 years H8141 .
|
29. அவன் முதிர் வயதினால் வலுவிழந்து மரணம் அடைந்தான். தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டபோது அவன் முதுமையும் ஆயுள் நிறைவும் உள்ளவனாய் இருந்தான். அவன் புதல்வராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தனர்.
|
29. And Isaac H3327 gave up the ghost H1478 , and died H4191 , and was gathered H622 unto H413 his people H5971 , being old H2205 and full H7649 of days H3117 : and his sons H1121 Esau H6215 and Jacob H3290 buried H6912 him.
|