Bible Versions
Bible Books

:

1 தங்கள் எண்ணிக்கையின்படி இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு வம்சங்களின் தலைவர்களும், ஆயிரம் பேர்களுக்கு தலைவர்களும், நூறு பேர்களுக்கு அதிபதிகளும் தலைவர்களும், இவர்களுடைய தலைவர்களும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருடத்தில் உண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவிற்குப் பணிவிடை செய்வதற்கு பிரிக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
2 முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
3 அவன் பேரேசின் சந்ததியார்களில் சகல தளபதிகளின் தலைவனாக இருந்து முதல் மாதம் விசாரித்தான்.
4 இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
5 மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
6 இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.
7 நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
8 ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
9 ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
10 ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
11 எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய சிப்பெக்காய் என்னும் ஊசாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
12 ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
13 பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
14 பதினோராவது மாதத்தின் பதினோராம் தளபதி எப்பிராயீம் கோத்திரத்தில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
15 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள்.
16 இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.
17 லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக்.
18 யூதா கோத்திரத்திற்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் மகன் ஒம்ரி.
19 செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
20 எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல்.
21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் மகன் யாசியேல்.
22 தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
24 செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
25 ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும்,
26 நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் மகன் எஸ்ரியும்,
27 திராட்சைத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சைத்தோட்டங்களின் பலனாகிய திராட்சைரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
28 பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை மரங்களின்மேலும் கெதேரியனான பாகாலானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
29 சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,
30 ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
31 ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
32 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான்.
33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான்.
34 பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×