|
|
1. {எட்டாம் வாதையாகிய வெட்டுக்கிளி} PS அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காகத்தான் அவன் இருதயத்தையும், அவன் அதிகாரிகளுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன்.
|
1. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Go in H935 unto H413 Pharaoh H6547 : for H3588 I H589 have hardened H3513 H853 his heart H3820 , and the heart H3820 of his servants H5650 , that H4616 I might show H7896 these H428 my signs H226 before H7130 him:
|
2. மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார். PEPS
|
2. And that H4616 thou mayest tell H5608 in the ears H241 of thy son H1121 , and of thy son H1121 's son H1121 , H853 what things H834 I have wrought H5953 in Egypt H4714 , and my signs H226 which H834 I have done H7760 among them ; that ye may know H3045 how that H3588 I H589 am the LORD H3068 .
|
3. எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நீ எவ்வளவு காலத்திற்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு.
|
3. And Moses H4872 and Aaron H175 came in H935 unto H413 Pharaoh H6547 , and said H559 unto H413 him, Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of the Hebrews H5680 , How long H5704 H4970 wilt thou refuse H3985 to humble thyself H6031 before H4480 H6440 me? let my people H5971 go H7971 , that they may serve H5647 me.
|
4. நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன்.
|
4. Else H3588 , if H518 thou H859 refuse H3986 to let H853 my people H5971 go H7971 , behold H2009 , tomorrow H4279 will I bring H935 the locusts H697 into thy coast H1366 :
|
5. அவை நிலமே தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை வயல்வெளியில் பனிக்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்கள் உட்பட, முளைக்கும் எல்லா மரங்களையும் தின்றுவிடும்.
|
5. And they shall cover H3680 H853 the face H5869 of the earth H776 , that one cannot H3808 be able H3201 to see H7200 H853 the earth H776 : and they shall eat H398 H853 the residue H3499 of that which is escaped H6413 , which remaineth H7604 unto you from H4480 the hail H1259 , and shall eat H398 H853 every H3605 tree H6086 which groweth H6779 for you out of H4480 the field H7704 :
|
6. அவை உன் வீடுகளையும், உன் அதிகாரிகளின் வீடுகளையும், எகிப்தியருடைய எல்லா வீடுகளையும் நிரப்பும். உன் தந்தையரோ, முற்பிதாக்களோ அவர்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை அப்படிப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி” மோசே பார்வோனை விட்டுத் திரும்பிப்போனான். PEPS
|
6. And they shall fill H4390 thy houses H1004 , and the houses H1004 of all H3605 thy servants H5650 , and the houses H1004 of all H3605 the Egyptians H4714 ; which H834 neither H3808 thy fathers H1 , nor thy fathers H1 ' fathers H1 have seen H7200 , since the day H4480 H3117 that they were H1961 upon H5921 the earth H127 unto H5704 this H2088 day H3117 . And he turned H6437 himself , and went out H3318 from H4480 H5973 Pharaoh H6547 .
|
7. பார்வோனின் அதிகாரிகள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்ய அந்த மனிதரைப் போகவிடும். எகிப்து நாடு பாழாய் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள். PEPS
|
7. And Pharaoh H6547 's servants H5650 said H559 unto H413 him , How long H5704 H4970 shall this man H2088 be H1961 a snare H4170 unto us? let H853 the men H376 go H7971 , that they may serve H5647 H853 the LORD H3068 their God H430 : knowest H3045 thou not yet H2962 that H3588 Egypt H4714 is destroyed H6 ?
|
8. எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்துவரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகிறவர்கள் யார்?” என்று கேட்டான். PEPS
|
8. And H853 Moses H4872 and Aaron H175 were brought again H7725 unto H413 Pharaoh H6547 : and he said H559 unto H413 them, Go H1980 , serve H5647 H853 the LORD H3068 your God H430 : but who H4310 H4310 are they that shall go H1980 ?
|
9. அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்கள், மகள்கள் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். எங்கள் யெகோவாவுக்கு நாங்கள் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். PEPS
|
9. And Moses H4872 said H559 , We will go H1980 with our young H5288 and with our old H2205 , with our sons H1121 and with our daughters H1323 , with our flocks H6629 and with our herds H1241 will we go H1980 ; for H3588 we must hold a feast H2282 unto the LORD H3068 .
|
10. அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘யெகோவா உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்லச் சொல்கிறாயா? நிச்சயமாக நீ தீயநோக்கமே கொண்டுள்ளாய்.
|
10. And he said H559 unto H413 them , Let the LORD H3068 be H1961 so H3651 with H5973 you, as H834 I will let you go H7971 , and your little ones H2945 : look H7200 to it ; for H3588 evil H7451 is before H5048 H6440 you.
|
11. இல்லை! ஆண்கள் மட்டும் போகட்டும்; போய் உங்கள் யெகோவாவை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிலையிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள். PEPS
|
11. Not H3808 so H3651 : go H1980 now H4994 ye that are men H1397 , and serve H5647 H853 the LORD H3068 ; for H3588 that ye H859 did desire H1245 . And they were driven out H1644 from H4480 H854 Pharaoh H6547 's presence H6440 .
|
12. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்தின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது நாட்டின்மேல் வெட்டுக்கிளிக் கூட்டம் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பி, வயல்வெளிகளில் முளைக்கும் எல்லாவற்றையும் தின்றுவிடும்” என்றார். PEPS
|
12. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Stretch out H5186 thine hand H3027 over H5921 the land H776 of Egypt H4714 for the locusts H697 , that they may come up H5927 upon H5921 the land H776 of Egypt H4714 , and eat H398 H853 every H3605 herb H6212 of the land H776 , even H853 all H3605 that H834 the hail H1259 hath left H7604 .
|
13. மோசே தன் கோலை எகிப்தின்மேல் நீட்டினான். அப்பொழுது யெகோவா, அன்று பகலும் இரவும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின்மேல் வீசச்செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
|
13. And Moses H4872 stretched forth H5186 H853 his rod H4294 over H5921 the land H776 of Egypt H4714 , and the LORD H3068 brought H5090 an east H6921 wind H7307 upon the land H776 all H3605 that H1931 day H3117 , and all H3605 that night H3915 ; and when it was H1961 morning H1242 , the east H6921 wind H7307 brought H5375 H853 the locusts H697 .
|
14. அவை எகிப்தின்மேல் படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக இறங்கின. வெட்டுக்கிளிகளினால் உண்டான இப்படிப்பட்ட வாதை இதற்குமுன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை.
|
14. And the locusts H697 went up H5927 over H5921 all H3605 the land H776 of Egypt H4714 , and rested H5117 in all H3605 the coasts H1366 of Egypt H4714 : very H3966 grievous H3515 were they ; before H6440 them there were H1961 no H3808 such H3651 locusts H697 as they, neither H3808 after H310 them shall be H1961 such H3651 .
|
15. அவை நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடியதனால் நிலம் கருமையாயிற்று. ஆலங்கட்டி மழைக்குப்பின், தப்பிய எல்லா பயிர்களையும், மரங்களிலுள்ள பழங்களையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடு முழுவதிலும் உள்ள மரங்களிலோ, செடிகளிலோ பச்சையானது ஒன்றும் மீந்திருக்கவில்லை. PEPS
|
15. For they covered H3680 H853 the face H5869 of the whole H3605 earth H776 , so that the land H776 was darkened H2821 ; and they did eat H398 H853 every H3605 herb H6212 of the land H776 , and all H3605 the fruit H6529 of the trees H6086 which H834 the hail H1259 had left H3498 : and there remained H3498 not H3808 any H3605 green thing H3418 in the trees H6086 , or in the herbs H6212 of the field H7704 , through all H3605 the land H776 of Egypt H4714 .
|
16. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாய் அழைப்பித்து, அவர்களிடம், “நான் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவம் செய்துவிட்டேன்.
|
16. Then Pharaoh H6547 called H7121 for Moses H4872 and Aaron H175 in haste H4116 ; and he said H559 , I have sinned H2398 against the LORD H3068 your God H430 , and against you.
|
17. ஆகையால் இன்னொருமுறை என் பாவத்தை மன்னித்து, இந்த மரண வாதையை என்னைவிட்டு எடுத்துப்போடும்படி உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடுங்கள்” என்றான். PEPS
|
17. Now H6258 therefore forgive H5375 , I pray thee H4994 , my sin H2403 only H389 this once H6471 , and entreat H6279 the LORD H3068 your God H430 , that he may take away H5493 from H4480 H5921 me this H2088 H853 death H4194 only H7535 .
|
18. அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான்.
|
18. And he went out H3318 from H4480 H5973 Pharaoh H6547 , and entreated H6279 H413 the LORD H3068 .
|
19. யெகோவா காற்றைப் பலத்த காற்றாக மேற்கு பக்கத்திற்குத் திருப்பி வீசச்செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிக் கொண்டுபோய் செங்கடலுக்குள் சேர்த்தது. எகிப்தின் எல்லைக்குள் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீந்திருக்கவில்லை.
|
19. And the LORD H3068 turned H2015 a mighty H3966 strong H2389 west H3220 wind H7307 , which took away H5375 H853 the locusts H697 , and cast H8628 them into the Red H5488 sea H3220 ; there remained H7604 not H3808 one H259 locust H697 in all H3605 the coasts H1366 of Egypt H4714 .
|
20. ஆனாலும் யெகோவா பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார். அவன் இஸ்ரயேலரைப் போகவிடவில்லை. PS
|
20. But the LORD H3068 hardened H2388 H853 Pharaoh H6547 's heart H3820 , so that he would not H3808 let H853 the children H1121 of Israel H3478 go H7971 .
|
21. {ஒன்பதாம் வாதையாகிய இருள்} PS அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை வானத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது எல்லோரும் உணரக்கூடிய இருள் எகிப்தின்மேல் உண்டாகும்” என்றார்.
|
21. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Stretch out H5186 thine hand H3027 toward H5921 heaven H8064 , that there may be H1961 darkness H2822 over H5921 the land H776 of Egypt H4714 , even darkness H2822 which may be felt H4959 .
|
22. மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான். அப்பொழுது மூன்று நாட்கள் முழுமையான இருள் எகிப்து முழுவதையும் மூடியது.
|
22. And Moses H4872 stretched forth H5186 H853 his hand H3027 toward H5921 heaven H8064 ; and there was H1961 a thick H653 darkness H2822 in all H3605 the land H776 of Egypt H4714 three H7969 days H3117 :
|
23. மூன்று நாட்களுக்கு யாரும் வேறொருவரைப் பார்க்கவோ அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சம் இருந்தது. PEPS
|
23. They saw H7200 not H3808 one H376 H853 another H251 , neither H3808 rose H6965 any H376 from his place H4480 H8478 for three H7969 days H3117 : but all H3605 the children H1121 of Israel H3478 had H1961 light H216 in their dwellings H4186 .
|
24. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “நீங்கள் போய் உங்கள் யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்றான். PEPS
|
24. And Pharaoh H6547 called H7121 unto H413 Moses H4872 , and said H559 , Go H1980 ye, serve H5647 H853 the LORD H3068 ; only H7535 let your flocks H6629 and your herds H1241 be stayed H3322 : let your little ones H2945 also H1571 go H1980 with H5973 you.
|
25. அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிகளையும், தகன காணிக்கைகளையும் நாம் எடுத்துச்செல்ல நீர் எங்களை அனுமதிக்கவேண்டும்.
|
25. And Moses H4872 said H559 , Thou H859 must give H5414 us H3027 also H1571 sacrifices H2077 and burnt offerings H5930 , that we may sacrifice H6213 unto the LORD H3068 our God H430 .
|
26. எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச்செல்லக் கூடாது. எங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதற்கு அவைகளிலிருந்து சிலவற்றை எடுக்கவேண்டும். நாங்கள் அங்கேபோய்ச் சேருமட்டும், நாங்கள் எதைக்கொண்டு யெகோவாவை வழிபடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது” என்றான். PEPS
|
26. Our cattle H4735 also H1571 shall go H1980 with H5973 us ; there shall not H3808 a hoof H6541 be left behind H7604 ; for H3588 thereof H4480 must we take H3947 to serve H5647 H853 the LORD H3068 our God H430 ; and we H587 know H3045 not H3808 with what H4100 we must serve H5647 H853 the LORD H3068 , until H5704 we come H935 thither H8033 .
|
27. யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
|
27. But the LORD H3068 hardened H2388 H853 Pharaoh H6547 's heart H3820 , and he would H14 not H3808 let them go H7971 .
|
28. பார்வோன் மோசேயிடம், “நீ என் கண்முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். PEPS
|
28. And Pharaoh H6547 said H559 unto him, Get H1980 thee from H4480 H5921 me , take heed H8104 to thyself, see H7200 my face H6440 no H408 more H3254 ; for H3588 in that day H3117 thou seest H7200 my face H6440 thou shalt die H4191 .
|
29. அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான். PE
|
29. And Moses H4872 said H559 , Thou hast spoken H1696 well H3651 , I will see H7200 thy face H6440 again H3254 no H3808 more H5750 .
|