|
|
1. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “யாராவது ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளையோ அல்லது அவனுடைய கவனிப்பில் விடப்பட்ட பொருளையோ வஞ்சிப்பதினாலாவது, திருடுவதினாலாவது, அவனை ஏமாற்றுவதினாலாவது தன் அயலானுக்கு எதிராகப் பாவஞ்செய்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாயிருக்கக்கூடும்.
|
2. If H3588 a soul H5315 sin H2398 , and commit H4603 a trespass H4604 against the LORD H3068 , and lie H3584 unto his neighbor H5997 in that which was delivered him to keep H6487 , or H176 in fellowship H8667 H3027 , or H176 in a thing taken away by violence H1498 , or H176 hath deceived H6231 H853 his neighbor H5997 ;
|
3. அல்லது அவன் தொலைந்த பொருட்களைக் கண்டெடுத்தும் அதைக் குறித்துப் பொய் சொல்வதினாலாவது, பொய்யாய் சத்தியம் செய்வதினாலாவது, மக்கள் செய்யக்கூடிய இப்படியான எந்த ஒரு பாவத்தையும் அவன் செய்வதினால் யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருக்கக்கூடும்.
|
3. Or H176 have found H4672 that which was lost H9 , and lieth H3584 concerning it , and sweareth H7650 falsely H5921 H8267 ; in H5921 any H259 of all H4480 H3605 these that H834 a man H120 doeth H6213 , sinning H2398 therein H2007 :
|
4. இவ்வாறு அவன் பாவங்களைச் செய்து குற்றவாளியாகிறான். அவன் தான் திருடியதையோ அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதையோ அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையோ அல்லது தான் கண்டெடுத்த தொலைந்த பொருளையோ
|
4. Then it shall be H1961 , because H3588 he hath sinned H2398 , and is guilty H816 , that he shall restore H7725 H853 that H1500 which H834 he took violently away H1497 , or H176 H853 the thing H6233 which H834 he hath deceitfully gotten H6231 , or H176 H853 that H6487 which H834 was delivered him to keep H6485 H854 , or H176 H853 the lost thing H9 which H834 he found H4672 ,
|
5. அல்லது அவன் பொய்யாய் சத்தியம் செய்துகொண்ட எதையுமோ அவன் கட்டாயமாக திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும், அதனுடன் சேர்த்துத் தன் குற்றநிவாரண பலியைச் செலுத்தும் நாளில், அதன் சொந்தக்காரனுக்கு அது முழுவதையும் ஒப்படைக்கவேண்டும்.
|
5. Or H176 all that H4480 H3605 about which H834 he hath sworn H7650 H5921 falsely H8267 ; he shall even restore H7999 it in the principal H7218 , and shall add H3254 the fifth part H2549 more thereto H5921 , and give H5414 it unto him to whom H834 it H1931 appertaineth , in the day H3119 of his trespass offering H819 .
|
6. தனக்கான தண்டனையாக தன் குற்றநிவாரண காணிக்கையை ஆசாரியனிடத்தில், அதாவது யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் செம்மறியாட்டுக் கடா உரிய மதிப்பு உடையதாகவும் குறைபாடு அற்றதாகவும் இருக்கவேண்டும்.
|
6. And he shall bring H935 his trespass offering H817 unto the LORD H3068 , a ram H352 without blemish H8549 out of H4480 the flock H6629 , with thy estimation H6187 , for a trespass offering H817 , unto H413 the priest H3548 :
|
7. இவ்விதம் ஆசாரியன் யெகோவாவுக்கு முன்பாக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது எவைகளைச் செய்து அவன் குற்றவாளியானானோ அவைகளினின்று அவன் மன்னிக்கப்படுவான்.” PS
|
7. And the priest H3548 shall make an atonement H3722 for H5921 him before H6440 the LORD H3068 : and it shall be forgiven H5545 him for H5921 any thing H259 of all H4480 H3605 that H834 he hath done H6213 in trespassing H819 therein.
|
8. {தகன காணிக்கை} PS மீண்டும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
|
8. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
9. “நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் இந்தக் கட்டளையைக் கொடு. ‘தகன காணிக்கைக்குரிய ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கை இரவு முழுவதும் மறுநாள் காலைவரை பலிபீடத்தின் அடுப்பின்மேல் இருக்கவேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
|
9. Command H6680 H853 Aaron H175 and his sons H1121 , saying H559 , This H2063 is the law H8451 of the burnt offering H5930 : It H1931 is the burnt offering H5930 , because of H5921 the burning H4169 upon H5921 the altar H4196 all H3605 night H3915 unto H5704 the morning H1242 , and the fire H784 of the altar H4196 shall be burning H3344 in it.
|
10. ஆசாரியன் மென்பட்டு உள் உடைகளைத் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி உடுத்தி, அதன் மேலாக தன் மென்பட்டு உடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். அதன்பின் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பினால் எரிந்துபோன தகன காணிக்கையின் சாம்பலை அகற்றி, பலிபீடத்தின் பக்கத்தில் அதை வைக்கவேண்டும்.
|
10. And the priest H3548 shall put on H3847 his linen H906 garment H4055 , and his linen H906 breeches H4370 shall he put H3847 upon H5921 his flesh H1320 , and take up H7311 H853 the ashes H1880 which H834 the fire H784 hath consumed H398 with H854 the burnt offering H5930 on H5921 the altar H4196 , and he shall put H7760 them beside H681 the altar H4196 .
|
11. அதன்பின் ஆசாரியன் அந்த உடைகளைக் கழற்றி, மற்ற உடைகளை உடுத்திக்கொண்டு, சாம்பலை எடுத்து முகாமுக்கு வெளியே, சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்பட்ட இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
|
11. And he shall put off H6584 H853 his garments H899 , and put on H3847 other H312 garments H899 , and carry forth H3318 H853 the ashes H1880 without H413 H4480 H2351 the camp H4264 unto H413 a clean H2889 place H4725 .
|
12. பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது, ஆசாரியன் ஒவ்வொரு காலையிலும் இன்னும் விறகுகளைப் போட்டு, தகன காணிக்கையை நெருப்பின்மேல் ஒழுங்குபடுத்தி, அதன்மேல் சமாதான காணிக்கையின் கொழுப்பைப் போட்டு எரிக்கவேண்டும்.
|
12. And the fire H784 upon H5921 the altar H4196 shall be burning H3344 in it ; it shall not H3808 be put out H3518 : and the priest H3548 shall burn H1197 wood H6086 on H5921 it every morning H1242 H1242 , and lay H6186 the burnt offering H5930 in order upon H5921 it ; and he shall burn H6999 thereon H5921 the fat H2459 of the peace offerings H8002 .
|
13. பலிபீடத்தின்மேல் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது. PS
|
13. The fire H784 shall ever H8548 be burning H3344 upon H5921 the altar H4196 ; it shall never H3808 go out H3518 .
|
14. {தானியக் காணிக்கை} PS “ ‘தானியக் காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே: ஆரோனின் மகன்கள் யெகோவாவிடம் பலிபீடத்துக்கு முன்பாக அதைக் கொண்டுவர வேண்டும்.
|
14. And this H2063 is the law H8451 of the meat offering H4503 : the sons H1121 of Aaron H175 shall offer H7126 it before H6440 the LORD H3068 , before H413 H6440 the altar H4196 .
|
15. ஆசாரியன் தானியக் காணிக்கையிலுள்ள நறுமணத்தூளுடன் சேர்த்து, ஒரு கைப்பிடி சிறந்த மாவையும் எண்ணெயையும் எடுக்கவேண்டும். அந்த ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
|
15. And he shall take H7311 of H4480 it his handful H7062 , of the flour H4480 H5560 of the meat offering H4503 , and of the oil H4480 H8081 thereof , and all H3605 the frankincense H3828 which H834 is upon H5921 the meat offering H4503 , and shall burn H6999 it upon the altar H4196 for a sweet H5207 savor H7381 , even the memorial H234 of it , unto the LORD H3068 .
|
16. அதன் மீதியானதை ஆரோனும் அவன் மகன்களும் சாப்பிடவேண்டும். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலே, புளிப்பில்லாததாகச் சாப்பிடவேண்டும். அவர்கள் அதைச் சபைக்கூடார முற்றத்தில் சாப்பிடவேண்டும்;
|
16. And the remainder H3498 thereof H4480 shall Aaron H175 and his sons H1121 eat H398 : with unleavened bread H4682 shall it be eaten H398 in the holy H6918 place H4725 ; in the court H2691 of the tabernacle H168 of the congregation H4150 they shall eat H398 it.
|
17. ஆனால் அது புளிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படக் கூடாது. எனக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில், அவர்களுடைய பங்காக நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன். பாவநிவாரண காணிக்கையைப் போலவும், குற்றநிவாரண காணிக்கையைப் போலவும் இதுவும் மகா பரிசுத்தமானது.
|
17. It shall not H3808 be baked H644 with leaven H2557 . I have given H5414 it unto them for their portion H2506 of my offerings made by fire H4480 H801 ; it H1931 is most holy H6944 H6944 , as is the sin offering H2403 , and as the trespass offering H817 .
|
18. அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் சாப்பிடலாம். தலைமுறைதோறும் நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற காணிக்கைகளில், இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்’ ” என்றார். PEPS
|
18. All H3605 the males H2145 among the children H1121 of Aaron H175 shall eat H398 of it. It shall be a statute H2706 forever H5769 in your generations H1755 concerning the offerings of the LORD made by fire H4480 H801 H3068 : every one H3605 that H834 toucheth H5060 them shall be holy H6942 .
|
19. யெகோவா தொடர்ந்து மோசேயிடம் சொன்னதாவது,
|
19. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
20. “ஆரோனும் அவன் மகன்களும் தாங்கள் அபிஷேகம் பண்ணப்படுகிற நாளிலே யெகோவாவுக்குக் கொண்டுவரவேண்டிய காணிக்கை இதுவே: ஒரு எப்பா அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை *அதாவது, சுமார் 1.6 கிலோகிராம் மாவு தானியக் காணிக்கையாக காலையில் அரைப்பங்கையும், மாலையில் அரைப்பங்கையும் கொண்டுவர வேண்டும்.
|
20. This H2088 is the offering H7133 of Aaron H175 and of his sons H1121 , which H834 they shall offer H7126 unto the LORD H3068 in the day H3117 when he is anointed H4886 ; the tenth part H6224 of an ephah H374 of fine flour H5560 for a meat offering H4503 perpetual H8548 , half H4276 of it in the morning H1242 , and half H4276 thereof at night H6153 .
|
21. அதை எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு வலைத்தட்டியில் தயாரிக்க வேண்டும். நன்றாகப் பிசைந்து தயாரித்த அதைத் துண்டுகளாக நொறுக்கி, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தானியக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
|
21. In H5921 a pan H4227 it shall be made H6213 with oil H8081 ; and when it is baked H7246 , thou shalt bring it in H935 : and the baked H8601 pieces H6595 of the meat offering H4503 shalt thou offer H7126 for a sweet H5207 savor H7381 unto the LORD H3068 .
|
22. ஆரோனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனாக வரப்போகும் அவனுடைய மகனே அதைத் தயாரிக்க வேண்டும். இது யெகோவாவினுடைய நிரந்தரமான பங்கு. அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்.
|
22. And the priest H3548 of his sons H4480 H1121 that is anointed H4899 in his stead H8478 shall offer H6213 it: it is a statute H2706 forever H5769 unto the LORD H3068 ; it shall be wholly H3632 burnt H6999 .
|
23. ஆசாரியனின் எல்லா தானியக் காணிக்கையும், முழுவதுமாய் எரிக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.” PS
|
23. For every H3605 meat offering H4503 for the priest H3548 shall be H1961 wholly H3632 burnt : it shall not H3808 be eaten H398 .
|
24. {பாவநிவாரண காணிக்கை} PS யெகோவா மோசேயிடம்,
|
24. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
25. “நீ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொல்லவேண்டியதாவது: பாவநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கைக்கான மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே பாவநிவாரண காணிக்கைக்கான மிருகமும் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும். இது மகா பரிசுத்தமானது.
|
25. Speak H1696 unto H413 Aaron H175 and to H413 his sons H1121 , saying H559 , This H2063 is the law H8451 of the sin offering H2403 : In the place H4725 where H834 the burnt offering H5930 is killed H7819 shall the sin offering H2403 be killed H7819 before H6440 the LORD H3068 : it H1931 is most holy H6944 H6944 .
|
26. அதைச் செலுத்தும் ஆசாரியன் அதைச் சாப்பிடவேண்டும். அதை சபைக்கூடார முற்றத்தில் உள்ள ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்.
|
26. The priest H3548 that offereth it for sin H2398 H853 shall eat H398 it : in the holy H6918 place H4725 shall it be eaten H398 , in the court H2691 of the tabernacle H168 of the congregation H4150 .
|
27. காணிக்கை இறைச்சியைத் தொடுகிற எதுவும் பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஏதேனும் உடையில் தெறித்திருந்தால், அதை நீங்கள் பரிசுத்த இடத்திலே கழுவவேண்டும்.
|
27. Whatsoever H3605 H834 shall touch H5060 the flesh H1320 thereof shall be holy H6942 : and when H834 there is sprinkled H5137 of the blood H4480 H1818 thereof upon H5921 any garment H899 , thou shalt wash H3526 that whereon H834 H5921 it was sprinkled H5137 in the holy H6918 place H4725 .
|
28. அது சமைக்கப்பட்ட மண்சட்டி உடைக்கப்பட வேண்டும். ஆனால் அது வெண்கலப் பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை நன்கு தேய்த்து தண்ணீரால் அலசவேண்டும்.
|
28. But the earthen H2789 vessel H3627 wherein H834 it is sodden H1310 shall be broken H7665 : and if H518 it be sodden H1310 in a brazen H5178 pot H3627 , it shall be both scoured H4838 , and rinsed H7857 in water H4325 .
|
29. ஆசாரியர்களின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். அது மகா பரிசுத்தமானது.
|
29. All H3605 the males H2145 among the priests H3548 shall eat H398 thereof: it H1931 is most holy H6944 H6944 .
|
30. ஆனால் எந்தவொரு பாவநிவாரண காணிக்கையின் இரத்தமும், பரிசுத்த இடத்தில் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்காக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவரப்பட்டால், அக்காணிக்கையைச் சாப்பிடக்கூடாது; அது எரிக்கப்படவேண்டும். PE
|
30. And no H3808 H3605 sin offering H2403 , whereof H834 any of the blood H4480 H1818 is brought H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 to reconcile H3722 withal in the holy H6944 place , shall be eaten H398 : it shall be burnt H8313 in the fire H784 .
|