|
|
1. {விபசாரியைக் குறித்த எச்சரிக்கை} PS என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.
|
1. My son H1121 , keep H8104 my words H561 , and lay up H6845 my commandments H4687 with H854 thee.
|
2. என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்.
|
2. Keep H8104 my commandments H4687 , and live H2421 ; and my law H8451 as the apple H380 of thine eye H5869 .
|
3. அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.
|
3. Bind H7194 them upon H5921 thy fingers H676 , write H3789 them upon H5921 the table H3871 of thine heart H3820 .
|
4. ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல்.
|
4. Say H559 unto wisdom H2451 , Thou H859 art my sister H269 ; and call H7121 understanding H998 thy kinswoman H4129 :
|
5. அவை உன்னை விபசாரியிடமிருந்தும், மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.
|
5. That they may keep H8104 thee from the strange H2114 woman H4480 H802 , from the stranger H4480 H5237 which flattereth H2505 with her words H561 .
|
6. நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று திரை வழியேப் பார்த்தேன்.
|
6. For H3588 at the window H2474 of my house H1004 I looked H8259 through H1157 my casement H822 ,
|
7. அப்பொழுது அறிவில்லாத இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற ஒரு வாலிபனைக் கண்டேன்.
|
7. And beheld H7200 among the simple ones H6612 , I discerned H995 among the youths H1121 , a young man H5288 void H2638 of understanding H3820 ,
|
8. அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான்.
|
8. Passing H5674 through the street H7784 near H681 her corner H6438 ; and he went H6805 the way H1870 to her house H1004 ,
|
9. அது பொழுதுபட்டு மாலைமங்கி இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது.
|
9. In the twilight H5399 , in the evening H6153 H3117 , in the black H380 and dark H653 night H3915 :
|
10. அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய், தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள்.
|
10. And, behold H2009 , there met H7125 him a woman H802 with the attire H7897 of a harlot H2181 , and subtle H5341 of heart H3820 .
|
11. அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை.
|
11. ( She H1931 is loud H1993 and stubborn H5637 ; her feet H7272 abide H7931 not H3808 in her house H1004 :
|
12. அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள், மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள்.
|
12. Now H6471 is she without H2351 , now H6471 in the streets H7339 , and lieth in wait H693 at H681 every H3605 corner H6438 .)
|
13. அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமில்லாத முகத்துடனே அவனிடம்:
|
13. So she caught H2388 him , and kissed H5401 him, and with an impudent H5810 face H6440 said H559 unto him,
|
14. “நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி, இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன்.
|
14. I have peace offerings H2077 H8002 with H5921 me ; this day H3117 have I paid H7999 my vows H5088 .
|
15. அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்; நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன்.
|
15. Therefore H5921 H3651 came I forth H3318 to meet H7125 thee , diligently to seek H7836 thy face H6440 , and I have found H4672 thee.
|
16. நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன்.
|
16. I have decked H7234 my bed H6210 with coverings of tapestry H4765 , with carved H2405 works , with fine linen H330 of Egypt H4714 .
|
17. நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன்.
|
17. I have perfumed H5130 my bed H4904 with myrrh H4753 , aloes H174 , and cinnamon H7076 .
|
18. வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!
|
18. Come H1980 , let us take our fill H7301 of love H1730 until H5704 the morning H1242 : let us solace ourselves H5965 with loves H159 .
|
19. எனது கணவன் வீட்டில் இல்லை; அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான்.
|
19. For H3588 the goodman H376 is not H369 at home H1004 , he is gone H1980 a long H4480 H7350 journey H1870 :
|
20. அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள்.
|
20. He hath taken H3947 a bag H6872 of money H3701 with H3027 him, and will come H935 home H1004 at the day H3117 appointed H3677 .
|
21. இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.
|
21. With her much H7230 fair speech H3948 she caused him to yield H5186 , with the flattering H2506 of her lips H8193 she forced H5080 him.
|
22. உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் வலையில் விழப்போகும் மானைப்போலவும்
|
22. He goeth H1980 after H310 her straightway H6597 , as an ox H7794 goeth H935 to H413 the slaughter H2874 , or as a fool H191 to H413 the correction H4148 of the stocks H5914 ;
|
23. தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.
|
23. Till H5704 a dart H2671 strike through H6398 his liver H3516 ; as a bird H6833 hasteth H4116 to H413 the snare H6341 , and knoweth H3045 not H3808 that H3588 it H1931 is for his life H5315 .
|
24. ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
|
24. Hearken H8085 unto me now H6258 therefore , O ye children H1121 , and attend H7181 to the words H561 of my mouth H6310 .
|
25. உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்; அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள்.
|
25. Let not H408 thine heart H3820 decline H7847 to H413 her ways H1870 , go not astray H8582 H408 in her paths H5410 .
|
26. அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்; அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம்.
|
26. For H3588 she hath cast down H5307 many H7227 wounded H2491 : yea, many H3605 strong H6099 men have been slain H2026 by her.
|
27. அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. PE
|
27. Her house H1004 is the way H1870 to hell H7585 , going down H3381 to H413 the chambers H2315 of death H4194 .
|