|
|
1. {மோசே மற்றும் மிரியாமின் பாடல்} PS அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது: “நான் யெகோவாவைப் பாடுவேன், அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும், அதை ஓட்டியவனையும் அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.
|
1. Then H227 sang H7891 Moses H4872 and the children H1121 of Israel H3478 H853 this H2063 song H7892 unto the LORD H3068 , and spoke H559 , saying H559 , I will sing H7891 unto the LORD H3068 , for H3588 he hath triumphed gloriously H1342 H1342 : the horse H5483 and his rider H7392 hath he thrown H7411 into the sea H3220 .
|
2. “யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார், அவரே என் இரட்சிப்புமானார். அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன். அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
|
2. The LORD H3050 is my strength H5797 and song H2176 , and he is become H1961 my salvation H3444 : he H2088 is my God H410 , and I will prepare him a habitation H5115 ; my father H1 's God H430 , and I will exalt H7311 him.
|
3. யெகோவா யுத்தத்தில் வீரர்; யெகோவா என்பதே அவரது பெயர்.
|
3. The LORD H3068 is a man H376 of war H4421 : the LORD H3068 is his name H8034 .
|
4. அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும் கடலுக்குள் தள்ளிவிட்டார். பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள் செங்கடலில் அழிந்தார்கள்.
|
4. Pharaoh H6547 's chariots H4818 and his host H2428 hath he cast H3384 into the sea H3220 : his chosen H4005 captains H7991 also are drowned H2883 in the Red H5488 sea H3220 .
|
5. ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது; ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.
|
5. The depths H8415 have covered H3680 them : they sank H3381 into the bottom H4688 as H3644 a stone H68 .
|
6. யெகோவாவே, உமது வலதுகரம் வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது. யெகோவாவே, உமது வலதுகரமே எதிரியை நொறுக்கியது.
|
6. Thy right hand H3225 , O LORD H3068 , is become glorious H142 in power H3581 : thy right hand H3225 , O LORD H3068 , hath dashed in pieces H7492 the enemy H341 .
|
7. “உமது மாட்சிமையின் மகத்துவத்தினால் உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர். உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்; அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.
|
7. And in the greatness H7230 of thine excellency H1347 thou hast overthrown H2040 them that rose up against H6965 thee : thou sentest forth H7971 thy wrath H2740 , which consumed H398 them as stubble H7179 .
|
8. உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்தது. பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன; ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.
|
8. And with the blast H7307 of thy nostrils H639 the waters H4325 were gathered together H6192 , the floods H5140 stood upright H5324 as H3644 a heap H5067 , and the depths H8415 were congealed H7087 in the heart H3820 of the sea H3220 .
|
9. பகைவன் பெருமையாக, ‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன். நான் கொள்ளையைப் பங்கிடுவேன்; அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன். என் வாளை உருவுவேன், என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.
|
9. The enemy H341 said H559 , I will pursue H7291 , I will overtake H5381 , I will divide H2505 the spoil H7998 ; my lust H5315 shall be satisfied H4390 upon them ; I will draw H7324 my sword H2719 , my hand H3027 shall destroy H3423 them.
|
10. ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர், கடல் அவர்களை மூடியது. அவர்கள் ஈயத்தைப் போல் பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
|
10. Thou didst blow H5398 with thy wind H7307 , the sea H3220 covered H3680 them : they sank H6749 as lead H5777 in the mighty H117 waters H4325 .
|
11. யெகோவாவே, தெய்வங்களுக்குள் உம்மைப்போல் யார் உண்டு? பரிசுத்தத்தில் மாட்சிமையும், மகிமையில் வியக்கத்தக்கவரும், அதிசயங்களையும் செய்கிற உம்மைப்போல் யார் உண்டு?
|
11. Who H4310 is like unto thee H3644 , O LORD H3068 , among the gods H410 ? who H4310 is like thee H3644 , glorious H142 in holiness H6944 , fearful H3372 in praises H8416 , doing H6213 wonders H6382 ?
|
12. “உமது வலது கரத்தை நீட்டினீர், பூமி அவர்களை விழுங்கிற்று.
|
12. Thou stretchedst out H5186 thy right hand H3225 , the earth H776 swallowed H1104 them.
|
13. நீர் மீட்டுக்கொண்ட மக்களை உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர். நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு, உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.
|
13. Thou in thy mercy H2617 hast led forth H5148 the people H5971 which H2098 thou hast redeemed H1350 : thou hast guided H5095 them in thy strength H5797 unto H413 thy holy H6944 habitation H5116 .
|
14. மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்; பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
|
14. The people H5971 shall hear H8085 , and be afraid H7264 : sorrow H2427 shall take hold H270 on the inhabitants H3427 of Philistia H6429 .
|
15. ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள், மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும், கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;
|
15. Then H227 the dukes H441 of Edom H123 shall be amazed H926 ; the mighty men H352 of Moab H4124 , trembling H7461 shall take hold upon H270 them; all H3605 the inhabitants H3427 of Canaan H3667 shall melt away H4127 .
|
16. பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை, நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை, உமது கரத்தின் வல்லமையால் அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
|
16. Fear H367 and dread H6343 shall fall H5307 upon H5921 them ; by the greatness H1419 of thine arm H2220 they shall be as still H1826 as a stone H68 ; till H5704 thy people H5971 pass over H5674 , O LORD H3068 , till H5704 the people H5971 pass over H5674 , which H2098 thou hast purchased H7069 .
|
17. யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில் நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்; அந்த இடத்தையே நீர் உமது தங்குமிடமாக்கினீர், யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
|
17. Thou shalt bring them in H935 , and plant H5193 them in the mountain H2022 of thine inheritance H5159 , in the place H4349 , O LORD H3068 , which thou hast made H6466 for thee to dwell in H3427 , in the Sanctuary H4720 , O Lord H136 , which thy hands H3027 have established H3559 .
|
18. “யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.” PEPS
|
18. The LORD H3068 shall reign H4427 forever H5769 and ever H5703 .
|
19. பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.
|
19. For H3588 the horse H5483 of Pharaoh H6547 went in H935 with his chariots H7393 and with his horsemen H6571 into the sea H3220 , and the LORD H3068 brought again H7725 H853 the waters H4325 of the sea H3220 upon H5921 them ; but the children H1121 of Israel H3478 went H1980 on dry H3004 land in the midst H8432 of the sea H3220 .
|
20. அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள்.
|
20. And Miriam H4813 the prophetess H5031 , the sister H269 of Aaron H175 , took H3947 H853 a timbrel H8596 in her hand H3027 ; and all H3605 the women H802 went out H3318 after H310 her with timbrels H8596 and with dances H4246 .
|
21. அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது: “யெகோவாவைப் பாடுங்கள், ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும் அதை ஓட்டியவனையும் கடலிலே வீசியெறிந்தார்.” PS
|
21. And Miriam H4813 answered H6030 them, Sing H7891 ye to the LORD H3068 , for H3588 he hath triumphed gloriously H1342 H1342 ; the horse H5483 and his rider H7392 hath he thrown H7411 into the sea H3220 .
|
22. {ஏலீம் மற்றும் மாராவின் கசப்பான தண்ணீர்} PS அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
|
22. So Moses H4872 brought H5265 H853 Israel H3478 from the Red sea H4480 H3220 H5488 , and they went out H3318 into H413 the wilderness H4057 of Shur H7793 ; and they went H1980 three H7969 days H3117 in the wilderness H4057 , and found H4672 no H3808 water H4325 .
|
23. அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா *மாரா என்றால் கசப்பு என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது.
|
23. And when they came H935 to Marah H4785 , they could H3201 not H3808 drink H8354 of the waters H4325 of Marah H4480 H4785 , for H3588 they H1992 were bitter H4751 : therefore H5921 H3651 the name H8034 of it was called H7121 Marah H4785 .
|
24. எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள். PEPS
|
24. And the people H5971 murmured H3885 against H5921 Moses H4872 , saying H559 , What H4100 shall we drink H8354 ?
|
25. மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது. PEPS பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார்.
|
25. And he cried H6817 unto H413 the LORD H3068 ; and the LORD H3068 showed H3384 him a tree H6086 , which when he had cast H7993 into H413 the waters H4325 , the waters H4325 were made sweet H4985 : there H8033 he made H7760 for them a statute H2706 and an ordinance H4941 , and there H8033 he proved H5254 them,
|
26. அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார். PEPS
|
26. And said H559 , If H518 thou wilt diligently hearken H8085 H8085 to the voice H6963 of the LORD H3068 thy God H430 , and wilt do H6213 that which is right H3477 in his sight H5869 , and wilt give ear H238 to his commandments H4687 , and keep H8104 all H3605 his statutes H2706 , I will put H7760 none H3808 H3605 of these diseases H4245 upon H5921 thee, which H834 I have brought H7760 upon the Egyptians H4714 : for H3588 I H589 am the LORD H3068 that healeth H7495 thee.
|
27. அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள். PE
|
27. And they came H935 to Elim H362 , where H8033 were twelve H8147 H6240 wells H5869 of water H4325 , and threescore and ten H7657 palm trees H8558 : and they encamped H2583 there H8033 by H5921 the waters H4325 .
|