|
|
1. {தமஸ்குவுக்கு எதிரான இறைவாக்கு} PS தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: “பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது; அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
|
1. The burden H4853 of Damascus H1834 . Behold H2009 , Damascus H1834 is taken away H5493 from being a city H4480 H5892 , and it shall be H1961 a ruinous H4654 heap H4596 .
|
2. அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு, மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்; அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
|
2. The cities H5892 of Aroer H6177 are forsaken H5800 : they shall be H1961 for flocks H5739 , which shall lie down H7257 , and none H369 shall make them afraid H2729 .
|
3. எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்; தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும். இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே, சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
|
3. The fortress H4013 also shall cease H7673 from Ephraim H4480 H669 , and the kingdom H4467 from Damascus H4480 H1834 , and the remnant H7605 of Syria H758 : they shall be H1961 as the glory H3519 of the children H1121 of Israel H3478 , saith H5002 the LORD H3068 of hosts H6635 .
|
4. “அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்; அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.
|
4. And in that H1931 day H3117 it shall come to pass H1961 , that the glory H3519 of Jacob H3290 shall be made thin H1809 , and the fatness H4924 of his flesh H1320 shall wax lean H7329 .
|
5. அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து, தன் கையால் அறுவடை செய்வதுபோலவும், ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”
|
5. And it shall be H1961 as when the harvest man H7105 gathereth H622 the corn H7054 , and reapeth H7114 the ears H7641 with his arm H2220 ; and it shall be H1961 as he that gathereth H3950 ears H7641 in the valley H6010 of Rephaim H7497 .
|
6. ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின், அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும், பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள் விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”
|
6. Yet gleaning grapes H5955 shall be left H7604 in it , as the shaking H5363 of an olive tree H2132 , two H8147 or three H7969 berries H1620 in the top H7218 of the uppermost bough H534 , four H702 or five H2568 in the outermost fruitful H6509 branches H5585 thereof, saith H5002 the LORD H3068 God H430 of Israel H3478 .
|
7. அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்; அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.
|
7. At that H1931 day H3117 shall a man H120 look H8159 to H5921 his Maker H6213 , and his eyes H5869 shall have respect H7200 to H413 the Holy One H6918 of Israel H3478 .
|
8. தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்; அசேரா தேவதைகளின் தூண்களுக்கும், தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும் மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள். PEPS
|
8. And he shall not H3808 look H8159 to H413 the altars H4196 , the work H4639 of his hands H3027 , neither H3808 shall respect H7200 that which H834 his fingers H676 have made H6213 , either the groves H842 , or the images H2553 .
|
9. இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.
|
9. In that H1931 day H3117 shall his strong H4581 cities H5892 be H1961 as a forsaken H5800 bough H2793 , and an uppermost branch H534 , which H834 they left H5800 because H4480 H6440 of the children H1121 of Israel H3478 : and there shall be H1961 desolation H8077 .
|
10. நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து, உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள். ஆதலால் சிறந்த தாவரங்களையும், வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும் ஒழுங்காய் நாட்டினாலும்,
|
10. Because H3588 thou hast forgotten H7911 the God H430 of thy salvation H3468 , and hast not H3808 been mindful H2142 of the rock H6697 of thy strength H4581 , therefore H5921 H3651 shalt thou plant H5193 pleasant H5282 plants H5194 , and shalt set H2232 it with strange H2114 slips H2156 :
|
11. நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும், விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும் அறுவடையில் ஒன்றும் இராது; வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.
|
11. In the day H3117 shalt thou make thy plant H5194 to grow H7735 , and in the morning H1242 shalt thou make thy seed H2233 to flourish H6524 : but the harvest H7105 shall be a heap H5067 in the day H3117 of grief H2470 and of desperate H605 sorrow H3511 .
|
12. அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்; அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள். மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்; பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.
|
12. Woe H1945 to the multitude H1995 of many H7227 people H5971 , which make a noise H1993 like the noise H1993 of the seas H3220 ; and to the rushing H7588 of nations H3816 , that make a rushing H7582 like the rushing H7588 of mighty H3524 waters H4325 !
|
13. பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும், அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள். அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும், புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
|
13. The nations H3816 shall rush H7582 like the rushing H7588 of many H7227 waters H4325 : but God shall rebuke H1605 them , and they shall flee H5127 far off H4480 H4801 , and shall be chased H7291 as the chaff H4671 of the mountains H2022 before H6440 the wind H7307 , and like a rolling thing H1534 before H6440 the whirlwind H5492 .
|
14. மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்; விடியுமுன் அழிவு; நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே; நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே. PE
|
14. And behold H2009 at eveningtide H6256 H6153 trouble H1091 ; and before H2962 the morning H1242 he is not H369 . This H2088 is the portion H2506 of them that spoil H8154 us , and the lot H1486 of them that rob H962 us.
|