|
|
1. {எண்ணெயும் அப்பமும்} PS யெகோவா மோசேயிடம்,
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு.
|
2. Command H6680 H853 the children H1121 of Israel H3478 , that they bring H3947 unto H413 thee pure H2134 oil H8081 olive H2132 beaten H3795 for the light H3974 , to cause the lamps H5216 to burn H5927 continually H8548 .
|
3. சபைக் கூடாரத்திலே, சாட்சிப்பெட்டியின் திரைக்கு வெளியே, இந்த விளக்குகளை ஆரோன் யெகோவா முன்னிலையில் மாலைவேளை தொடங்கி விடியும்வரை தொடர்ந்து எரியும்படிச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் ஒரு நிரந்தர நியமமாக இருக்கவேண்டும்.
|
3. Without H4480 H2351 the veil H6532 of the testimony H5715 , in the tabernacle H168 of the congregation H4150 , shall Aaron H175 order H6186 it from the evening H4480 H6153 unto H5704 the morning H1242 before H6440 the LORD H3068 continually H8548 : it shall be a statute H2708 forever H5769 in your generations H1755 .
|
4. சுத்தத் தங்கத்தினாலான குத்துவிளக்கின் மேலுள்ள விளக்குகள் யெகோவா முன்னிலையில் தொடர்ந்து எரியும்படி அவன் பார்த்துக்கொள்ளவேண்டும். PEPS
|
4. He shall order H6186 H853 the lamps H5216 upon H5921 the pure H2889 candlestick H4501 before H6440 the LORD H3068 continually H8548 .
|
5. “சிறந்த மாவை எடுத்து, ஒவ்வொரு அப்பத்திற்கும் பத்தில் இரண்டு எப்பா அளவு மாவைப் பயன்படுத்தி, பன்னிரண்டு அப்பங்களைச் சுடவேண்டும்.
|
5. And thou shalt take H3947 fine flour H5560 , and bake H644 twelve H8147 H6240 cakes H2471 thereof: two H8147 tenth deals H6241 shall be H1961 in one H259 cake H2471 .
|
6. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்களாக, யெகோவா முன்னிலையில் காணப்படும் சுத்தத் தங்கத்தினாலான மேஜையின்மேல் இரண்டு வரிசைகளில் அவற்றை வைக்கவேண்டும்.
|
6. And thou shalt set H7760 them in two H8147 rows H4634 , six H8337 on a row H4635 , upon H5921 the pure H2889 table H7979 before H6440 the LORD H3068 .
|
7. ஒவ்வொரு வரிசையிலும் அப்பத்திற்கான ஞாபகார்த்தப் பங்காகவும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாகவும் இருக்கும்படி, கொஞ்சம் சுத்தமான நறுமணத்தூளையும் போடவேண்டும்.
|
7. And thou shalt put H5414 pure H2134 frankincense H3828 upon H5921 each row H4635 , that it may be H1961 on the bread H3899 for a memorial H234 , even an offering made by fire H801 unto the LORD H3068 .
|
8. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இஸ்ரயேலர் சார்பான, நிரந்தர உடன்படிக்கையாக இந்த அப்பம் யெகோவாவுக்கு முன்பாக நித்தமும் வைக்கப்பட வேண்டும்.
|
8. Every sabbath H3117 H7676 H3117 H7676 he shall set it in order H6186 before H6440 the LORD H3068 continually H8548 , being taken from H4480 H854 the children H1121 of Israel H3478 by an everlasting H5769 covenant H1285 .
|
9. இது ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியது. அவர்கள் இதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடவேண்டும். ஏனெனில், இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் அவர்களுடைய நிரந்தரமான உரிமையில் மகா பரிசுத்தமான பங்கு.” PS
|
9. And it shall be H1961 Aaron H175 's and his sons H1121 ' ; and they shall eat H398 it in the holy H6918 place H4725 : for H3588 it H1931 is most holy H6944 H6944 unto him of the offerings of the LORD made by fire H4480 H801 H3068 by a perpetual H5769 statute H2706 .
|
10. {நிந்தனைக்குத் தண்டனை} PS ஒரு எகிப்திய மனிதனுக்கும், இஸ்ரயேல் பெண்ணுக்கும் மகனான ஒரு மனிதன் இஸ்ரயேல் மக்களுக்குள் போனான். அவனுக்கும் ஒரு இஸ்ரயேலனுக்கும் இடையில் முகாமுக்குள் சண்டை மூண்டது.
|
10. And the son H1121 of an Israelitish H3482 woman H802 , whose H1931 father H1121 H376 was an Egyptian H4713 , went out H3318 among H8432 the children H1121 of Israel H3478 : and this son H1121 of the Israelitish H3482 woman and a man H376 of Israel H3481 strove together H5327 in the camp H4264 ;
|
11. அந்த நேரத்தில் இஸ்ரயேல் பெண்ணின் மகனான அவன், யெகோவாவின் பெயரை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். எனவே அவர்கள் அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாய் தாண் கோத்திரத்து திப்ரியின் மகளான செலோமித்.
|
11. And the Israelitish H3482 woman H802 's son H1121 blasphemed H5344 H853 the name H8034 of the LORD , and cursed H7043 . And they brought H935 him unto H413 Moses H4872 : (and his mother H517 's name H8034 was Shelomith H8019 , the daughter H1323 of Dibri H1704 , of the tribe H4294 of Dan H1835 :)
|
12. அவனைப்பற்றி யெகோவாவின் விருப்பம் தெளிவாகும் வரை, அவனை அவர்கள் காவலில் வைத்தார்கள். PEPS
|
12. And they put H5117 him in ward H4929 , that H5921 the mind H6310 of the LORD H3068 might be showed H6567 them.
|
13. அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:
|
13. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
14. “நீ நிந்தித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவன் நிந்தித்ததைக் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும். பின்பு சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும்.
|
14. Bring forth H3318 H853 him that hath cursed H7043 without H413 H4480 H2351 the camp H4264 ; and let all H3605 that heard H8085 him lay H5564 H853 their hands H3027 upon H5921 his head H7218 , and let all H3605 the congregation H5712 stone H7275 him.
|
15. நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான்.
|
15. And thou shalt speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , Whosoever H376 H376 H3588 curseth H7043 his God H430 shall bear H5375 his sin H2399 .
|
16. யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன் பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன் கொல்லப்படவேண்டும்” என்றார். PEPS
|
16. And he that blasphemeth H5344 the name H8034 of the LORD H3068 , he shall surely be put to death H4191 H4191 , and all H3605 the congregation H5712 shall certainly stone H7275 H7275 him : as well the stranger H1616 , as he that is born in the land H249 , when he blasphemeth H5344 the name H8034 of the LORD , shall be put to death H4191 .
|
17. “ ‘யாராவது ஒருவன் ஒரு மனித உயிரைக் கொலை செய்தால், அவன் கொல்லப்படவேண்டும்.
|
17. And he H376 that H3588 killeth H5221 any H3605 man H5315 H120 shall surely be put to death H4191 H4191 .
|
18. யாராவது ஒருவன் இன்னொருவனுடைய மிருகத்தைக் கொன்றால், அவன் உயிருக்குப்பதில், உயிராகப் பதிலீடு செய்யவேண்டும்.
|
18. And he that killeth H5221 a beast H5315 H929 shall make it good H7999 ; beast H5315 for H8478 beast H5315 .
|
19. யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும்.
|
19. And if H3588 a man H376 cause H5414 a blemish H3971 in his neighbor H5997 ; as H834 he hath done H6213 , so H3651 shall it be done H6213 to him;
|
20. முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும்.
|
20. Breach H7667 for H8478 breach H7667 , eye H5869 for H8478 eye H5869 , tooth H8127 for H8478 tooth H8127 : as H834 he hath caused H5414 a blemish H3971 in a man H120 , so H3651 shall it be done H5414 to him again .
|
21. மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும்.
|
21. And he that killeth H5221 a beast H929 , he shall restore H7999 it : and he that killeth H5221 a man H120 , he shall be put to death H4191 .
|
22. உங்களிடம் தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்கவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார். PEPS
|
22. Ye shall have H1961 one H259 manner of law H4941 , as well H1961 for the stranger H1616 , as for one of your own country H249 : for H3588 I H589 am the LORD H3068 your God H430 .
|
23. மோசே இஸ்ரயேலருடன் பேசினான். அவர்கள் இறைவனை நிந்தனை செய்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்விதமாய் மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். PE
|
23. And Moses H4872 spoke H1696 to H413 the children H1121 of Israel H3478 , that they should bring forth H3318 H853 him that had cursed H7043 out of H413 H4480 H2351 the camp H4264 , and stone H7275 him with stones H68 . And the children H1121 of Israel H3478 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
|