Bible Versions
Bible Books

Isaiah 52 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
IRVTA   எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையை அணிந்துகொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார உடைகளை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
ERVTA   எழும்பு, சீயோனே எழும்பு, மகிமையான ஆடைகளை அணிந்துகொள்! பலத்தை எடுத்துக்கொள்! பரிசுத்தமான எருசலேமே எழுந்து நில்! தேவனைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளாத ஜனங்கள் மீண்டும் உனக்குள் நுழைய முடியாது! அந்த ஜனங்கள் சுத்தமும் பரிசுத்தமும் இல்லாதவர்கள்.
RCTA   எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.
ECTA   விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்; திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்; விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us