|
|
1. “மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ? பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ?
|
1. Knowest H3045 thou the time H6256 when the wild goats H3277 of the rock H5553 bring forth H3205 ? or canst thou mark H8104 when the hinds H355 do calve H2342 ?
|
2. அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ? அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ?
|
2. Canst thou number H5608 the months H3391 that they fulfill H4390 ? or knowest H3045 thou the time H6256 when they bring forth H3205 ?
|
3. அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்; குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும்.
|
3. They bow H3766 themselves , they bring forth H6398 their young ones H3206 , they cast out H7971 their sorrows H2256 .
|
4. அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன, அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை.
|
4. Their young ones H1121 are in good liking H2492 , they grow up H7235 with corn H1250 ; they go forth H3318 , and return H7725 not H3808 unto them.
|
5. “காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
|
5. Who H4310 hath sent out H7971 the wild ass H6501 free H2670 ? or who H4310 hath loosed H6605 the bands H4147 of the wild ass H6171 ?
|
6. நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும், உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன்.
|
6. Whose H834 house H1004 I have made H7760 the wilderness H6160 , and the barren land H4420 his dwellings H4908 .
|
7. அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை.
|
7. He scorneth H7832 the multitude H1995 of the city H7151 , neither H3808 regardeth H8085 he the crying H8663 of the driver H5065 .
|
8. அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.
|
8. The range H3491 of the mountains H2022 is his pasture H4829 , and he searcheth H1875 after H310 every H3605 green thing H3387 .
|
9. “காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ? அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?
|
9. Will the unicorn H7214 be willing H14 to serve H5647 thee, or H518 abide H3885 by H5921 thy crib H18 ?
|
10. காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ? அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ?
|
10. Canst thou bind H7194 the unicorn H7214 with his band H5688 in the furrow H8525 ? or H518 will he harrow H7702 the valleys H6010 after H310 thee?
|
11. அதின் மிகுந்த பலத்தை நம்பி, உன் கடின வேலைகளை அதனிடம் விட்டுவிடுவாயோ?
|
11. Wilt thou trust H982 him, because H3588 his strength H3581 is great H7227 ? or wilt thou leave H5800 thy labor H3018 to H413 him?
|
12. அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து, சூடடிக்கும் களத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
|
12. Wilt thou believe H539 him, that H3588 he will bring home H7725 thy seed H2233 , and gather H622 it into thy barn H1637 ?
|
13. “தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும், நாரையின் சிறகுகளுடனும் சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது.
|
13. Gavest thou the goodly H5965 wings H3671 unto the peacocks H7443 ? or H518 wings H84 and feathers H2624 unto the ostrich H5133 ?
|
14. தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு, மணலிலே அவற்றைச் சூடாகும்படி விட்டுவிடுகிறது.
|
14. Which H3588 leaveth H5800 her eggs H1000 in the earth H776 , and warmeth H2552 them in H5921 dust H6083 ,
|
15. முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ, காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை.
|
15. And forgetteth H7911 that H3588 the foot H7272 may crush H2115 them , or that the wild H7704 beast H2416 may break H1758 them.
|
16. அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்; அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை.
|
16. She is hardened H7188 against her young ones H1121 , as though they were not H3808 hers : her labor H3018 is in vain H7385 without H1097 fear H6343 ;
|
17. ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை; நல்லுணர்வையும் கொடுக்கவில்லை.
|
17. Because H3588 God H433 hath deprived H5382 her of wisdom H2451 , neither H3808 hath he imparted H2505 to her understanding H998 .
|
18. ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது, குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது.
|
18. What time H6256 she lifteth up herself H4754 on high H4791 , she scorneth H7832 the horse H5483 and his rider H7392 .
|
19. “குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ? அதின் கழுத்தைப் பிடரிமயிரினால் மூடியது நீயோ?
|
19. Hast thou given H5414 the horse H5483 strength H1369 ? hast thou clothed H3847 his neck H6677 with thunder H7483 ?
|
20. நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி, அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ?
|
20. Canst thou make him afraid H7493 as a grasshopper H697 ? the glory H1935 of his nostrils H5170 is terrible H367 .
|
21. அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து, தூசியைக் கிளப்பிக்கொண்டு போர்க்களத்திற்குப் பாய்ந்து செல்கிறது.
|
21. He paweth H2658 in the valley H6010 , and rejoiceth H7797 in his strength H3581 : he goeth on H3318 to meet H7125 the armed men H5402 .
|
22. அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை. அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை.
|
22. He mocketh H7832 at fear H6343 , and is not H3808 frightened H2865 ; neither H3808 turneth he back H7725 from H4480 H6440 the sword H2719 .
|
23. மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு அதனுடைய இடுப்பில் கலகலக்கிறது.
|
23. The quiver H827 rattleth H7439 against H5921 him , the glittering H3851 spear H2595 and the shield H3591 .
|
24. அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது; எக்காள சத்தம் கேட்கும்போது, அதினால் அமைதியாய் நிற்கமுடியாது.
|
24. He swalloweth H1572 the ground H776 with fierceness H7494 and rage H7267 : neither H3808 believeth H539 he that H3588 it is the sound H6963 of the trumpet H7782 .
|
25. எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும் அது போர்க்களத்தையும், படைத் தலைவர்களின் கூக்குரலையும் தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிகிறது.
|
25. He saith H559 among H1767 the trumpets H7782 , Ha, ha H1889 ; and he smelleth H7306 the battle H4421 afar off H4480 H7350 , the thunder H7482 of the captains H8269 , and the shouting H8643 .
|
26. “பருந்து உயரப் பறப்பதும், தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ?
|
26. Doth the hawk H5322 fly H82 by thy wisdom H4480 H998 , and stretch H6566 her wings H3671 toward the south H8486 ?
|
27. கழுகு மேலே போய் உயரத்தில் தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ?
|
27. Doth the eagle H5404 mount up H1361 at H5921 thy command H6310 , and make her nest on high H7311 H7064 ?
|
28. அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது; செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம்.
|
28. She dwelleth H7931 and abideth H3885 on the rock H5553 , upon H5921 the crag H8127 of the rock H5553 , and the strong place H4686 .
|
29. அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்; அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும்.
|
29. From thence H4480 H8033 she seeketh H2658 the prey H400 , and her eyes H5869 behold H5027 afar off H4480 H7350 .
|
30. அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்; இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.” PE
|
30. Her young ones H667 also suck up H5966 blood H1818 : and where H834 the slain H2491 are , there H8033 is she H1931 .
|