Bible Versions
Bible Books

:

1. {தீரு அரசனுக்கெதிரான இறைவாக்கு} PS யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்:
1. The word H1697 of the LORD H3068 came H1961 again unto H413 me, saying H559 ,
2. “மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ உன் இருதயத்தில்,
“நான் ஒரு தெய்வம்;
கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்”
என பெருமையில் பேசுகிறாய்.
ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும்
நீ மனிதனேயன்றி தெய்வமல்ல;
2. Son H1121 of man H120 , say H559 unto the prince H5057 of Tyrus H6865 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Because H3282 thine heart H3820 is lifted up H1361 , and thou hast said H559 , I H589 am a God H410 , I sit H3427 in the seat H4186 of God H430 , in the midst H3820 of the seas H3220 ; yet thou H859 art a man H120 , and not H3808 God H410 , though thou set H5414 thine heart H3820 as the heart H3820 of God H430 :
3. தானியேலைவிட நீ அறிவாளியோ?
உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ?
3. Behold H2009 , thou H859 art wiser H2450 than Daniel H4480 H1840 ; there is no H3808 secret H5640 that they can hide H6004 from thee:
4. நீ உன் ஞானத்தினாலும்,
விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய்.
தங்கத்தையும் வெள்ளியையும்
உன் களஞ்சியங்களில் குவித்தாய்!
4. With thy wisdom H2451 and with thine understanding H8394 thou hast gotten H6213 thee riches H2428 , and hast gotten H6213 gold H2091 and silver H3701 into thy treasures H214 :
5. வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால்
உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்:
உன் செல்வத்தால்
உன் இருதயமும் மேட்டிமையடைந்தது. PEPS
5. By thy great H7230 wisdom H2451 and by thy traffic H7404 hast thou increased H7235 thy riches H2428 , and thine heart H3824 is lifted up H1361 because of thy riches H2428 :
6. “ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல்
ஞானமுள்ளவன் என எண்ணியபடியால்,
6. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Because H3282 thou hast set H5414 H853 thine heart H3820 as the heart H3820 of God H430 ;
7. நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான்
உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன்.
அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி,
துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள்.
7. Behold H2009 , therefore H3651 I will bring H935 strangers H2114 upon H5921 thee , the terrible H6184 of the nations H1471 : and they shall draw H7324 their swords H2719 against H5921 the beauty H3308 of thy wisdom H2451 , and they shall defile H2490 thy brightness H3314 .
8. அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள்.
நீ கடல்களின் நடுவே
ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்!
8. They shall bring thee down H3381 to the pit H7845 , and thou shalt die H4191 the deaths H4463 of them that are slain H2491 in the midst H3820 of the seas H3220 .
9. அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில்
“நான் ஒரு தெய்வம்” என்று சொல்வாயோ?
உன்னைக் கொலைசெய்வோர் கைகளில்
நீ தெய்வமல்ல, மனிதனேதான்.
9. Wilt thou yet say H559 H559 before H6440 him that slayeth H2026 thee, I H589 am God H430 ? but thou H859 shalt be a man H120 , and no H3808 God H410 , in the hand H3027 of him that slayeth H2490 thee.
10. பிறநாட்டாரின் கைகளிலே
நீ விருத்தசேதனம் அற்றவனைப்போல சாவாய். “நானே இதைச் சொன்னேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ” PS
10. Thou shalt die H4191 the deaths H4194 of the uncircumcised H6189 by the hand H3027 of strangers H2114 : for H3588 I H589 have spoken H1696 it , saith H5002 the Lord H136 GOD H3069 .
11. பின்னும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
11. Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
12. “மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘நீ ஞானத்தால் நிறைந்து, அழகில் முழுநிறைவுபெற்று,
முழுநிறைவின் மாதிரியாய்த் திகழ்ந்தாய்.
12. Son H1121 of man H120 , take up H5375 a lamentation H7015 upon H5921 the king H4428 of Tyrus H6865 , and say H559 unto him, Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Thou H859 sealest up H2856 the sum H8508 , full H4392 of wisdom H2451 , and perfect H3632 in beauty H3308 .
13. இறைவனின் தோட்டமாகிய
ஏதேனில் நீ இருந்தாய்.
சிவப்பு இரத்தினம், புஷ்பராகம்,
வைரம், பளிங்கு, கோமேதகம்,
யஸ்பி, இந்திரநீலம், மரகதம்,
மாணிக்கம் ஆகிய அத்தனை விலைமதிப்புள்ள கற்களும் உன்னை அலங்கரித்தன.
இவை எல்லாம் தங்க வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தன.
நீ உண்டாக்கப்பட்ட நாளிலேயே அவை ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன.
13. Thou hast been H1961 in Eden H5731 the garden H1588 of God H430 ; every H3605 precious H3368 stone H68 was thy covering H4540 , the sardius H124 , topaz H6357 , and the diamond H3095 , the beryl H8658 , the onyx H7718 , and the jasper H3471 , the sapphire H5601 , the emerald H5306 , and the carbuncle H1304 , and gold H2091 : the workmanship H4399 of thy tabrets H8596 and of thy pipes H5345 was prepared H3559 in thee in the day H3117 that thou wast created H1254 .
14. நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய்.
ஏனெனில் அப்படியே நான் உன்னை நியமித்தேன்.
இறைவனின் பரிசுத்த மலையில் நீ இருந்தாய்.
நெருப்புக்கனல் வீசும் கற்களிடையே நீ நடந்தாய்.
14. Thou H859 art the anointed H4473 cherub H3742 that covereth H5526 ; and I have set H5414 thee so : thou wast H1961 upon the holy H6944 mountain H2022 of God H430 ; thou hast walked up and down H1980 in the midst H8432 of the stones H68 of fire H784 .
15. நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி,
கொடுமை உன்னில் காணப்படுமட்டும்
உன்னுடைய வழிகளில் நீ குற்றமற்றிருந்தாய்.
15. Thou H859 wast perfect H8549 in thy ways H1870 from the day H4480 H3117 that thou wast created H1254 , till H5704 iniquity H5766 was found H4672 in thee.
16. உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால்,
நீ கொடுமை நிறைந்தவனாகிப் பாவம் செய்தாய்.
ஆகவே, காவல்காக்கும் கேருபே,
இவ்விதமாய் நான் உன்னை நெருப்புக்கனல் வீசும்
கற்களினிடையிலிருந்து வெளியேற்றினேன்.
நான் உன்னை இறைவனின் மலையிலிருந்து
அவமானத்தோடு துரத்திவிட்டேன்.
16. By the multitude H7230 of thy merchandise H7404 they have filled H4390 the midst H8432 of thee with violence H2555 , and thou hast sinned H2398 : therefore I will cast thee as profane H2490 out of the mountain H4480 H2022 of God H430 : and I will destroy H6 thee , O covering H5526 cherub H3742 , from the midst H4480 H8432 of the stones H68 of fire H784 .
17. உன் அழகினிமித்தம்
உன் இருதயம் பெருமைகொண்டது,
உன் செல்வச் சிறப்பின் காரணத்தால்
உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய்.
ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன்.
அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
17. Thine heart H3820 was lifted up H1361 because of thy beauty H3308 , thou hast corrupted H7843 thy wisdom H2451 by reason of H5921 thy brightness H3314 : I will cast H7993 thee to H5921 the ground H776 , I will lay H5414 thee before H6440 kings H4428 , that they may behold H7200 thee.
18. உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும்
பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய்.
ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன்.
அது உன்னைச் சுட்டெரித்தது.
மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய
பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.
18. Thou hast defiled H2490 thy sanctuaries H4720 by the multitude H4480 H7230 of thine iniquities H5771 , by the iniquity H5766 of thy traffic H7404 ; therefore will I bring forth H3318 a fire H784 from the midst H4480 H8432 of thee, it H1931 shall devour H398 thee , and I will bring H5414 thee to ashes H665 upon H5921 the earth H776 in the sight H5869 of all H3605 them that behold H7200 thee.
19. உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும்
உன்னைக் கண்டு திகைத்தார்கள்.
உனக்கு ஒரு பயங்கரமான முடிவு வந்துவிட்டது.
நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ” PS
19. All H3605 they that know H3045 thee among the people H5971 shall be astonished H8074 at H5921 thee : thou shalt be H1961 a terror H1091 , and never H369 shalt thou be any more H5704 H5769 .
20. {சீதோனுக்கு விரோதமாய் இறைவாக்கு} PS யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
20. Again the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
21. “மனுபுத்திரனே, நீ சீதோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவளுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது:
21. Son H1121 of man H120 , set H7760 thy face H6440 against H413 Zidon H6721 , and prophesy H5012 against H5921 it,
22. ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘சீதோனே, நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்;
நான் உன் மத்தியில் மகிமைப்படுவேன்.
நான் அவள்மீது தண்டனையை வரச்செய்து,
எனது பரிசுத்தத்தை அவள் மத்தியில் காட்டும்போது,
நானே யெகோவா என்பதை மனிதர்கள் அறிந்துகொள்வார்கள்.
22. And say H559 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I am against H5921 thee , O Zidon H6721 ; and I will be glorified H3513 in the midst H8432 of thee : and they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 , when I shall have executed H6213 judgments H8201 in her , and shall be sanctified H6942 in her.
23. நான் அவள்மீது கொள்ளைநோயை அனுப்பி,
அவளுடைய வீதிகளில் இரத்தத்தை ஓடப்பண்ணுவேன்.
ஒவ்வொரு திசையிலுமிருந்து அவளுக்கெதிராக வரும் வாளினால் கொல்லப்படுவோர்,
அவள் மத்தியில் விழுவார்கள்.
அப்பொழுது மனிதர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். PEPS
23. For I will send H7971 into her pestilence H1698 , and blood H1818 into her streets H2351 ; and the wounded H2491 shall be judged H5307 in the midst H8432 of her by the sword H2719 upon H5921 her on every side H4480 H5439 ; and they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 .
24. “ ‘இஸ்ரயேலருக்கோ வேதனைமிக்க முட்புதர்களும், கூரிய முட்களுமான வஞ்சனையுள்ள அயலவர் இனியொருபோதும் இருக்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள். PEPS
24. And there shall be H1961 no H3808 more H5750 a pricking H3992 brier H5544 unto the house H1004 of Israel H3478 , nor any grieving H3510 thorn H6975 of all H4480 H3605 that are round about H5439 them , that despised H7590 them ; and they shall know H3045 that H3588 I H589 am the Lord H136 GOD H3069 .
25. “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: பல நாடுகளிடையே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரயேலை, நான் அவர்களுக்குள்ளேயிருந்து ஒன்றுசேர்க்கும்போது, அந்த நாடுகளின் பார்வையில், இஸ்ரயேலர் மத்தியில் என்னைப் பரிசுத்தராக நான் காண்பிப்பேன். பின்பு அவர்கள் எனது அடியவன் யாக்கோபுக்கு நான் கொடுத்த அவர்களுடைய சொந்த நாட்டிலே குடியிருப்பார்கள்.
25. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; When I shall have gathered H6908 H853 the house H1004 of Israel H3478 from H4480 the people H5971 among whom H834 they are scattered H6327 , and shall be sanctified H6942 in them in the sight H5869 of the heathen H1471 , then shall they dwell H3427 in H5921 their land H127 that H834 I have given H5414 to my servant H5650 Jacob H3290 .
26. அங்கே அவர்கள் பாதுகாப்பாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள். அவர்களைத் தூற்றிய அவர்களுடைய அயலவர்கள் அனைவர்மீதும் நான் தண்டனையை வருவிக்கும்போது, இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வார்கள். அப்பொழுது அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ” என்றார். PE
26. And they shall dwell H3427 safely H983 therein H5921 , and shall build H1129 houses H1004 , and plant H5193 vineyards H3754 ; yea , they shall dwell H3427 with confidence H983 , when I have executed H6213 judgments H8201 upon all H3605 those that despise H7590 them round about H4480 H5439 them ; and they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 their God H430 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×