Versions
TOV தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
IRVTA தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் † என்று பெயரிட்டாள்.
ERVTA அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் "இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!" என்பதாகும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள்.
RCTA கடவுளின் பேழை பிடிபட்டுத் தன் மாமனாரும் கணவனும் இறந்து போனதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது என்று சொல்லி, தன் குழந்தைக்கு இகாபோத் என்று பெயரிட்டாள்.
ECTA கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு "இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது" என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள்.