Bible Versions
Bible Books

2 Chronicles 28:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
IRVTA   அப்பொழுது பெயர் குறிக்கப்பட்ட மனிதர்கள் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் ஆடையில்லாத அனைவருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்து, ஆடைகளையும் காலணிகளையும் அணிவித்து, அவர்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுடைய காயங்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களில் பெலவீனமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரர்களிடத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள். PEPS
ERVTA   உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
RCTA   அப்பொழுது அத்தலைவர்கள் எழுந்து சிறைப்பட்டோர் அனைவரையும் அழைத்து அவர்களில் உடை அற்றிருந்தவர்களுக்குக் கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்தனர். அவர்களுக்கு உடுப்புகளையும் மிதியடிகளையும் அணிவித்து, சாப்பிடவும் குடிக்கவும், உடலில் பூச எண்ணெயும் கொடுத்து அவர்களது களைப்பைப் போக்கினர். பிறகு நடக்கச் சக்தியற்றவரையும் தளர்ச்சியுற்றவரையும் குதிரைகளின் மேல் ஏற்றி ஈந்து மரங்களின் நகரமான எரிக்கோவிலிருந்த அவர்களுடைய சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்; பின்னர் சமாரியா திரும்பினர்.
ECTA   சிறைக் கைதிகளின் நலனுக்கென நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுள் ஆடையின்றி இருந்தோர்க்குக் கொள்ளைப் பொருள்களிலிருந்து உடைகளைக் கொடுத்தனர்; அவர்களுக்கு உடைகளையும் மிதியடிகளையும் அணிவித்து, உணவும் பணமும் கொடுத்து, உடலில் பூசத் தைலமும் அளித்தனர். அவர்கள் பலிவீனமானோர் எல்லாரையும் கழுதைகள் மேல் ஏற்றினர். அனைவரையும் பேரிச்சை மர நகரான எரிகோவில் அவர்கள் சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்ந்தனர். பின்னர் சமாரியா திரும்பினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us