Versions
TOV அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
IRVTA அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோ பட்டணத்தில் தங்கி இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
ERVTA இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, "உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்" என்றான்.
RCTA அது தாவீதுக்கு அறிவிக்கப்படவே, அம்மனிதர் மிகவும் வெட்கப்பட்டிருந்தது பற்றி அரசர் அவர்களுக்குத் தூதரை அனுப்பி, "உங்கள் தாடி வளரும் வரை நீங்கள் எரிக்கோவில் தங்கியிருந்து பிறகு வாருங்கள்" என்று சொல்லச் சொன்னார்.
ECTA இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரை சந்திக்க ஆளனுப்பினார். உங்கள் தாடிகள் வளரும் வரை எரிகோவில் தங்கி பிறகு திரும்புங்கள் என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.