Bible Versions
Bible Books

Isaiah 23:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.
IRVTA   அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும். PE
ERVTA   ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைக் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தைத் தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தைக் கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
RCTA   ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களும் வருமானமும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்படும்; அவற்றைச் சேர்த்து வைக்க மாட்டார்கள்; அவை குவிந்து கிடக்க மாட்டா; ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களைக் கொண்டு ஆண்டவர் திருமுன் வாழ்பவர்க்கு ஏராளமான உணவும் நல்ல உடையும் வழங்கப்படும்.
ECTA   ஆனால்;; அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us