Versions
TOV இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். PE
ERVTA சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது இரதங்களை எரிப்பேன். நான் உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன். நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய். ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்."
RCTA சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேள்: இதோ, உனக்கெதிராக நாம் எழும்புவோம், உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவோம், உன் இளஞ் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும், உனக்கு நாட்டில் இரை இல்லாதபடி செய்வோம், உன் தூதர்களின் குரல் இனிக் கேட்கப்பட மாட்டாது.
ECTA இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; உனக்கு எதிராக நான் எழும்புவேன்; உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்; உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.