Bible Versions
Bible Books

Ezekiel 46:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
IRVTA   அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம் * வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும்.
ERVTA   ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும்.
RCTA   ஆனால் தலைவன் தன் சொத்திலிருந்து எதையாவது தன் ஊழியனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தால், அது விடுதலையாண்டு வரையில் அவ்வூழியனுக்குச் சொந்தமாயிருக்கும்; பிறகு திரும்பத் தலைவனுக்குச் சொந்தமாகும்; அவனுடைய புதல்வர்கள் மட்டுமே தந்தையின் சொத்திலிருந்து பெற்ற அன்பளிப்பைத் தங்களுக்கே வைத்துக் கொள்ளலாம்.
ECTA   ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது "விடுதலை ஆண்டு" வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us