Versions
TOV அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
IRVTA அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
ERVTA அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை "பரிசுத்தமான சாலை" என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.
RCTA நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். 'திருப்பாதை' என்று அது பெயர் பெறும்; அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது.
ECTA அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது "தூய வழி" என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.