Versions
TOV ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
IRVTA ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
ERVTA யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள். கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள். கர்த்தர், "உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
RCTA பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும்.
ECTA பெண்டிரே! ஆண்டவரின்; வாக்கைக் கேளுங்கள்; உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்; உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.