Bible Versions
Bible Books

Joshua 22:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.
IRVTA   ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
ERVTA   இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது.
RCTA   ரூபன் புதல்வர்களும் காத் புதல்வர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளிலே இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக ஒரு பீடத்தைக் கட்டியிருந்ததைப் பற்றி உறுதியாக அறிந்தவுடன் இஸ்ராயேல் மக்கள்,
ECTA   ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தாரும் கானான் நாட்டின் எதிரில் யோர்தான் பகுதிகளில் இஸ்ரயேல் மக்களுக்கு அண்மையில் ஒரு பீடம் எழுப்பியுள்ளனர்" என்று இஸ்ரயேல் மக்கள் கேள்வியுற்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us