Versions
TOV உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
IRVTA உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
ERVTA உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும் நாட்டை விட்டு வெளியேற உன்னை வற்புறுத்துவார்கள். உன்னோடு சமாதானமாக உள்ள ஜனங்கள் (நல்ல நண்பர்கள்) தந்திரம் செய்து உன்னைத் தோற்கடிப்பார்கள். உன் நண்பர்கள் உனக்காக ஒரு கண்ணியைத் திட்டமிடுகிறார்கள். ‘அவன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
RCTA நாட்டின் எல்லை வரை உன்னைப் பகைவர்கள் விரட்டினார்கள், உன்னுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் யாவரும் உன்னை ஏய்த்தனர்; உன்னோடு நட்புறவாடியவர்கள் உனக்குக் கண்ணி வைத்தனர்," அவனுக்கு மூளையில்லை" என்று சொன்னார்கள்.
ECTA உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்; அவர்கள் உன்னை நாட்டின் எல்லை வரை விரட்டி விட்டார்கள்; உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்; உன்னோடு உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்; உன்னைக் குறித்து "அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை எங்கே?" என்றார்கள்.