Versions
TOV நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.
IRVTA பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.
ERVTA உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
RCTA தத்தம் ஊர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர் இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், சடங்கு முறைகள் முதலியவற்றிற்கு அடுத்த வழக்குகளை உங்களிடம் கொண்டு வரும் போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சீற்றம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் வராதபடியும் அவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் குற்றமற்றவராய் இருப்பீர்கள்.
ECTA அவரவர்தம் நகர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர், இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், நியமங்கள் ஆகியவற்றை அடுத்த வழக்குகளை உங்களிடம் தீர்ப்புக்குக் கொண்டு வரும்போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகத் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சினம் உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் விழாதபடியும் அவர்களை எச்சரியுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்.