Versions
TOV அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.
IRVTA அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த கடிதங்களை தபால்காரர்கள் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களிடத்திற்கு அவர் திரும்புவார்.
ERVTA எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் அரசனின் கடித்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்: இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா அரசர்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார்.
RCTA அரசனும் தலைவர்களும் கொடுத்த கடிதங்களைத் தூதுவர் வாங்கிக்கொண்டு இஸ்ராயேல், யூதா நாடெங்கும் போய் அரச கட்டளையைப் பறைசாற்றினார்கள்: 'இஸ்ராயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்புங்கள்; அப்படியாயின் அசீரிய அரசர்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்களுக்கு அவர் துணையாக வருவார்.
ECTA அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று, "இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.