Versions
TOV பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
IRVTA பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு * பார்க்க ரூத் 3:4, 7, 8. உன்னதப் பாட்டு 5:3 இந்த வசனங்களின்படி தாவீது உரியாவை வீட்டுக்கு அனுப்பி தன் மனைவிடம் உடல் உறவு செய்ய மறைமுகமாக ஏவினான் என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
ERVTA பின்பு தாவீது உரியாவை நோக்கி, "நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்" என்றான். அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான்.
RCTA பிறகு தாவீது உரியாசை நோக்கி, "உன் இல்லத்திற்குப் போய் உன் கால்களைக் கழுவு" என்றார். உரியாசு அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, அரச உணவு அவனுக்குப் பின்னால் அனுப்பப் பட்டது.
ECTA பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.