Versions
TOV இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.
IRVTA இதோ, வழக்குக்கும் தர்க்கத்திற்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்களுடைய கூக்குரலை உயரத்திலே கேட்கச்செய்வதற்காக, இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசிக்காதீர்கள்.
ERVTA நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை.
RCTA இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் போது, சண்டை சச்சரவுகள் போட்டுப் பிறரை அநியாயமாய் அடிக்கிறீர்கள். இன்று வரை நீங்கள் நோன்பிருந்தது போல் இருந்தால், உங்கள் கூக்குரல் உன்னதத்திற்கு எட்டாது.
ECTA இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.