Bible Versions
Bible Books

Judges 6:39 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே விசை சோதனைபண்ணட்டும்; தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
IRVTA   அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
ERVTA   அப்போது கிதியோன் தேவனை நோக்கி, "என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்" என்றான்.
RCTA   மறுபடி கெதெயோன் கடவுளை நோக்கி, "ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
ECTA   கிதியோன் கடவுளிடத்தில், "எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டும். தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us