Bible Versions
Bible Books

Exodus 14:18 (AKJV) American King James Version

Versions

TOV   இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
IRVTA   இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.
ERVTA   அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்" என்றார். சேனைகளை முறியடித்தல்
RCTA   இப்படி நாம் பாரவோனாலும், அவனுடைய தேர்களாலும், குதிரைகளினாலும் மாட்சி அடையும் போது, ஆண்டவர் நாமே என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றருளினார்.
ECTA   பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us