Bible Versions
Bible Books

Exodus 16:23 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
IRVTA   அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
ERVTA   மோசே அவர்களை நோக்கி, "இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்" என்றான்.
RCTA   அவர் அவர்களை நோக்கி: நாளை ஆண்டவருக்குக் காணிக்கையான ஓய்வு நாளாம். செய்ய வேண்டியதை எல்லாம் இன்று செய்யுங்கள்; சமைக்க வேண்டியதையும் சமைத்துக் கொள்ளுங்கள்; பின் மீதியாய் இருப்பதையெல்லாம் நாளைக் காலைவரை வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் சொன்ன வாக்கு இதுவே என்றார்.
ECTA   அப்போது அவர் அவர்களை நோக்கி, "கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான "சாபத்து ". எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us