Bible Versions
Bible Books

Ezekiel 16:52 (AKJV) American King James Version

Versions

TOV   இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
IRVTA   இப்போதும் உன்னுடைய சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைவிட அருவருப்பாகச் செய்த உன்னுடைய பாவங்களுக்காக உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்; உன்னைவிட அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன்னுடைய சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்த நீ வெட்கமடைந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்.
ERVTA   எனவே, உனது அவமானத்தைநீதாங்கிக்கொள்ளவேண்டும். உன்னோடு ஒப்பிடும் போது உனது சகோதரிகளை நீ நல்லவர்கள் ஆக்கிவிடுகிறாய். நீ பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறாய். எனவே, நீ அவமானப்படவேண்டும்."
RCTA   அப்படியிருக்க, உன் சகோதரிகளை விட நீ தான் பெரிய குற்றவாளி; அதிக அக்கிரமங்களைச் செய்திருக்கிறாய்; உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லும்படி இருக்கிறது; ஆகவே இப்போது உன் நாணத்தையும் வெட்கத்தையும் நீயே தாங்கு; அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி நீ நடந்ததால் அவமானத்தைத் தாங்கிக்கொள்.
ECTA   இப்போது உன் இழிவை நீயே தாங்கிக்கொள். உன் சகோதரிகளை விட மிகுதியாக அருவருப்பான பாவங்களைச் செய்து, அவர்களை உன்னைவிட நேர்மையானவர்கள் ஆக்கிவிட்டாய். உன் சகோதரிகளை நேர்மையானவர்கள் ஆக்கிய அந்த இழிவை நீயே சுமந்து கொள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us