Versions
TOV மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்.
IRVTA மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள்.
ERVTA மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர். எனவே, அவர்கள் உங்கள் நாட்டில் வாழட்டும். அவர்களின் பகைவர்களிடமிருந்து அவர்களை மறைத்துவையுங்கள். கொள்ளையானது நிறுத்தப்படும். பகைவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மற்ற ஜனங்களைக் காயப்படுத்திய மனிதர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியே போவார்கள்.
RCTA மோவாபிலிருந்து தப்பி வந்தவர்கள் உங்கள் நடுவில் தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனிடமிருந்து தப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்" என்கிறார்கள். ஒடுக்குபவன் ஒழிந்த பிறகு, அழிவு முடிவெய்திய பின்பு காலால் மிதித்துக் கொடுமை செய்பவன் நாட்டினின்று ஒழிந்து போன பின்னர்,
ECTA மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்; ஒடுக்குபவன் ஒழிந்து போவான்; அழிவு ஓய்ந்து போகும்; மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர்.