Versions
TOV நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
IRVTA நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.
ERVTA இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
RCTA பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்; அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்; ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.
ECTA பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.