Versions
TOV உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்களுடைய முன்னோர்களுடைய அக்கிரமங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்கள் மடியிலே தண்டிப்பேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே போடுவேனென்று யெகோவா சொல்கிறார்.
ERVTA "உனது பாவங்களும், உனது முன்னோர்களின் பாவங்களும் ஒன்றுபோல்தான் உள்ளன. கர்த்தர் இதைக் கூறுகிறார், "உங்கள் முற்பிதாக்கள் மலைகளில் நறுமணப் பொருட்களை எரித்தபோது இந்தப் பாவங்களைச் செய்தனர். அம்மலைகளில் அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் அவர்களை முதலில் தண்டித்தேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்".
RCTA அவர்களின் அக்கிரமங்களையும், மலைகளின் மேல் பலியிட்டுக் குன்றுகளின் மேல் சிலை வழிபாடு செய்து நம்மை அவமானப்படுத்திய அவர்களுடைய தந்தையர்களின் அக்கிரமங்களையும் ஒருமிக்கத் தண்டிப்போம்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய பலனை அவர்கள் மடியில் அளந்து கொடுப்போம், என்கிறார் ஆண்டவர்."
ECTA அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்; குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.