Bible Versions
Bible Books

Jeremiah 28:6 (AKJV) American King James Version

Versions

TOV   ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
IRVTA   ஆமென், யெகோவா அப்படியே செய்வாராக; யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரச்செய்வாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் யெகோவா நிறைவேற்றுவாராக.
ERVTA   எரேமியா அனனியாவிடம் "ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியைக் கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.
RCTA   இறைவாக்கினரான எரெமியாஸ் அவனை நோக்கி, "ஆமென்! அவ்வாறே ஆண்டவர் செய்வாராக! நீ உரைத்த வார்த்தைகளை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! பாத்திரங்கள் ஆண்டவரின் கோயிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுக! பபிலோனுக்குப் போனவர்கள் இவ்விடத்திற்குத் திரும்பி வருக!
ECTA   இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, "ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us