Bible Versions
Bible Books

Jeremiah 31:8 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.
IRVTA   இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
ERVTA   நினைவுகொள்ளுங்கள். வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன். பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன். ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள். பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.
RCTA   இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள்.
ECTA   இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us