Versions
TOV அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
IRVTA அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
ERVTA பிலாத்து அவரிடம், அப்படியானால் நீ அரசன் தானோ? என்று கேடடான். அதற்கு இயேசு, நான் அரசன் என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையுவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான் என்றார்.
RCTA எனவே, பிலாத்து அவரை நோக்கி, "அப்படியானால் நீ அரசன்தானா ?" என்று கேட்க, இயேசு, " ' அரசன் ' என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்குச் செவிமடுக்கிறான்" என்றார்.
ECTA பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார்.