Bible Versions
Bible Books

Joshua 20:9 (AKJV) American King James Version

Versions

TOV   கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறன் கையினால் சாகாதபடிக்கு ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
IRVTA   உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே. PE
ERVTA   யூதனோ, அல்லது அவர்களோடு வாழ்ந்த அந் நியனோ யாரையாவது அசம்பாவிதமாக கொல்ல நேர்ந்தால் இந்நகரங்களில் ஒன்றிற்கு பாதுகாப்பிற்காக ஓடிவிட அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனைத் துரத்தும் எவரும் அவனைக் கொல்லக் கூடாது. அந்நகரின் நீதிமன்றம் அவனுக்கு நீதி வழங்கும்.
RCTA   அறியாமல் ஒருவனைக் கொன்றவன் தன் நியாயங்களைப் பத்து பேர் முன்னிலையில் சொல்லும் வரை, இரத்தப்பழி வாங்கத் தேடுகிறவன் கையினாலே அவன் சாகாதபடி இஸ்ராயேல் மக்கள் யாவரும் அல்லது அவர்களின் நடுவே வாழும் அந்நியரும் ஓடித் தஞ்சமடைவதற்காகவே இந்நகர்கள் நியமிக்கப்பட்டன,
ECTA   இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us