Bible Versions
Bible Books

Leviticus 16:27 (AKJV) American King James Version

Versions

TOV   பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
IRVTA   பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
ERVTA   "பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும்.
RCTA   பாவப்பரிகாரத்திற்கென்று பலியிடப்பட்டு மூலத்தானத்திற்குள் இரத்தம் கொண்டு வரப்பட்ட பாவநிவாரணப் பலியாகிய காளையையும் ஆட்டுக்கிடாயையும் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், அவற்றின் தோலையும் இறைச்சியையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவார்கள்.
ECTA   தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us