Bible Versions
Bible Books

Leviticus 19:20 (AKJV) American King James Version

Versions

TOV   ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
IRVTA   “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.
ERVTA   "அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல.
RCTA   அடிமைப பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல.
ECTA   ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; கொல்லப்பட வேண்டாம்; அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us