Bible Versions
Bible Books

Matthew 21:15 (AKJV) American King James Version

Versions

TOV   அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
IRVTA   அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
ERVTA   தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.
RCTA   தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவர் செய்த வியத்தகு செயல்களையும், சிறுவர்கள் கோயிலில், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்று செய்த ஆரவாரத்தையும் கண்டுச் சினங்கொண்டனர்.
ECTA   அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் "தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us