Versions
TOV மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
IRVTA மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
ERVTA மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்.
RCTA ஆண்டவர் கட்டளைபடியே இஸ்ராயேலர் ஓரிடத்தைவிட்டு வேறிடத்திற்குப் போய்ப் பாளையம் இறங்குவார்கள். அந்த இடங்களின் வரிசைப்படியே மோயீசன் அவற்றை எழுதிவைத்தார்.
ECTA அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே;