Bible Versions
Bible Books

Numbers 8:15 (AKJV) American King James Version

Versions

TOV   இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.
IRVTA   இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும்.
ERVTA   "எனவே லேவியர்களை சுத்தமாக்குங்கள். அவர்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். நீங்கள் இவ்வாறு செய்த பிறகு அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வந்து தம் பணியைச் செய்யலாம்.
RCTA   இவையெல்லாம் நிறைவேறின பிறகு அவர்கள் நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுள் புகுவார்கள். இதுவே நீ அவர்களைப் புனிதப்படுத்தி, ஆண்டவராகிய நமக்கு இஸ்ராயேல் மக்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களென்று அபிசேகம் செய்யவேண்டிய சடங்கு முறை.
ECTA   நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, ஆரத்திபலியாக அர்ப்பணித்த சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்ய அவர்கள் உள்ளே போவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us