Bible Versions
Bible Books

2 Kings 17:26 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
IRVTA   அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
ERVTA   சிலர் அசீரியாவின் அரசனிடம், "நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந் நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது" என்றார்கள்.
RCTA   அப்பொழுது மக்கள் அசீரிய அரசனுக்குச் செய்தி அனுப்பி, "அரசே, தங்களால் இங்கிருந்து அனுப்பப்பட்டுச் சமாரியாவின் நகர்களில் குடியேறின இனத்தார் அந்த நாட்டின் கடவுளுடைய கட்டளைகளை அறிந்து நடக்கவில்லை; எனவே ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை அனுப்பினார். அம்மக்கள் அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளை அறியாது நடந்ததால், சிங்கங்கள் அவர்களைக் கொன்றுபோடுகின்றன" என்று அறிவித்தார்கள்.
ECTA   எனவே அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது; "நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில் அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us