Bible Versions
Bible Books

Jeremiah 13:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
IRVTA   எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார் என்ற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
ERVTA   "எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்" என்பார்கள்.
RCTA   "நீ அவர்களுக்கு இவ்வார்த்தையைச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும்." அவர்கள்: 'சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாதா?' என்பார்கள்.
ECTA   நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்; "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும், "அவர்களோ "சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?" என்று உன்னிடம் கூறுவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us