Versions
TOV உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
IRVTA உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;
உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது;
ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
ERVTA உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை, ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது. அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
RCTA (2) உம்முடைய பரிமளத்தின் மணம் இனிமையானது; உமது பெயர் ஊற்றப்பெற்ற தைலம்; ஆதலால் கன்னிப் பெண்கள் உம் மேல் அன்புகூர்கின்றனர்.
ECTA உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது; உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது; எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.