Bible Versions
Bible Books

1 Thessalonians 3:6 (AKJV) American King James Version

Versions

TOV   இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,
IRVTA   {தீமோத்தேயுவின் உற்சாகப்படுத்தும் அறிக்கை} PS இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,
ERVTA   ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக் கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்.
RCTA   ஆனால் இப்பொழுது, தீமோத்தேயு உங்களிடமிருந்து திரும்பி வந்து, விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார். நாங்கள் உங்களைக் காண விரும்புவது போலவே நீங்களும் எங்களைக் காண ஆவல் கொண்டவர்களாய், எப்பொழுதும் எங்களை அன்பாய் நினைவுகூருகிறீர்கள் என்று அறிவித்தார்.
ECTA   ஆனால் இப்பொழுது திமொத்தேயு உங்களிடமிருந்து திரும்பி எங்களிடம் வந்துவிட்டார்; உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார். நாங்கள் உங்களைக் காண ஏங்குவதுபோல நீங்களும் எங்களைக் காண விழைவதாகவும், எப்பொழுதும் எங்களை அன்போடு நினைவுகூறுவதாகவும் அறிவித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us