Bible Versions
Bible Books

2 Chronicles 18:14 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
IRVTA   அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
ERVTA   பிறகு மிகாயா ஆகாப் அரசனிடம் வந்தான். அரசன் அவனிடம், "மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?" என்று கேட்டான். அதற்கு மிகாயா, "போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்" என்றான்.
RCTA   அவர் அரசனிடம் வந்தவுடனே அரசன் அவரை நோக்கி, "மிக்கேயாஸ், நாங்கள் கலாத் நாட்டு இராமோத்துக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லலாமா, கூடாதா?" என்று கேட்டான். அதற்கு மிக்கேயாஸ், "போங்கள், எல்லாம் வெற்றிகரமாகவே முடியும்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.
ECTA   அவர் அரசனிடம் வந்தபோது அவன் அவரிடம், "மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்கலாமா? வேண்டாமா?" என்று கேட்டன். அதற்கு அவர், "போங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us