Versions
TOV அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
IRVTA அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.
ERVTA இஸ்ரவேல் அரசனான ஆகாப் யோசபாத்திடம், "கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்" என்றான்.
RCTA அதைக்கேட்டு இஸ்ராயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "இவன் எனக்குச் சாதமாக அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைப்பான் என்று நான் உமக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றான்.
ECTA அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா?" என்றான்.