Bible Versions
Bible Books

2 Chronicles 14:7 (NLV) New Life Verson

Versions

TOV   அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
IRVTA   அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
ERVTA   ஆசா யூத ஜனங்களிடம், "இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்" என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.
RCTA   அவன் யூதாவை நோக்கி, "நம் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை நாம் பின்பற்றி வந்ததால், அவர் நாடெங்கும் அமைதி நிலவச் செய்தார். சண்டையில்லாத இந்தக் காலத்தில் நாம் இந்நகர்களைக் கட்டவும், மதில்களையும் கோபுரங்களையும் எழுப்பி வாயில்களை அமைத்துத் தாழ்ப்பாள்களைப் போட்டுப் பலப்படுத்தவும் வேண்டும்" என்றான். அவ்விதமே மக்களும் செய்தனர். யாதொரு தடையுமின்றி வேலை நடந்தேறியது.
ECTA   அவன் யூதா மக்களிடம், "நம் கடவுளாம் ஆண்டவரை நாம் நாடியதால், நாடு நம் கையில் நிலைத்துள்ளது; நமக்கு எத்திக்கிலும் அவர் அமைதி அளித்துள்ளார். எனவே நாம் நகர்களைக் கட்டி, அவற்றைச் சுற்றிலும் கோட்டை, கொத்தளங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாயில்களையும் அமைப்போம்" என்று கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us