Versions
TOV அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
IRVTA அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
ERVTA அசீரியாவின் அரசன் இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான்.
RCTA அசீரிய அரசன் இஸ்ராயேலரைச் சிறைப்பிடித்து அசீரியாவுக்குக் கொண்டுபோய்க் கோசான் நதியோரமாயிருந்த மேதர்களுடைய நகர்களாகிய ஆலாயிலும் காபோரிலும் அவர்களைக் குடியேற்றினான்.
ECTA அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்; அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.