Versions
TOV உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு,
IRVTA உங்களுடைய தகப்பன்மார்களுக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்த தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரச்செய்யும்போது, நான் யெகோவா என்று நீங்கள் அறிந்துகொண்டு,
ERVTA பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன்.
RCTA நாம் உங்கள் தந்தையர்க்குத் தருவதாகக் கையுயர்த்தி ஆணையிட்டு வாக்களித்த இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களை நாம் கூட்டிக் கொண்டு வரும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
ECTA இவ்வாறு நான் உங்கள் மூதாதையர்க்குத் தருவதாக ஆணையிட்டுக் கூறிய இஸ்ரயேல் நாட்டுக்கு நான் உங்களை அழைத்து வரும்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.